வியாழன், 22 மார்ச், 2012

தண்ணீர்! தண்ணீர்!! - The Best Medicine!

தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். ஒரே மூச்சில் குடிக்காமல்,  அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்

*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.

எப்போது தண்ணீர் குடிக்கலாம்?

தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும். காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.கா லை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.

கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.

தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.

குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க

முறையாக தண்ணீர் குடியுங்கள்:

காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் குடித்தால், தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.

* கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.

* முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உடம்பில் நீர் அளவை நிரப்புவது மட்டுமல்ல, மூளை உணர்ச்சியை தூண்டும்.

* மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்.

* படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு தண்ணீரை முறையாய குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்.

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பளபளக்க செய்யும்.

தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.

தினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்பதுத்தலாம்.

இஸ்லாத்தில் தண்ணீர் குடிக்கும் முறை:

அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார். “ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார். “உம் வாயைவிட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.

“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்”அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.

“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீநன்றிகள்:

தினகரன்.

இஸ்லாம்குரல் ப்ளாக்தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

இஸ்லாம்குரல் ப்ளாக்

1 கருத்து:

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...