வெள்ளி, 25 நவம்பர், 2011

பாம்பு வருது! - ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

Naja naja with hood spread open

இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். ஏனைய நாகப் பாம்பினங்களைப் போலவே இந்திய நாகமும் எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும். இவை ஏறத்தாழ இரண்டு மீற்றர் நீளம் வரை வளரக் கூடியன. ஏப்ரல் முதல் யூலை மாதங்களுக்கிடையில் இவை முட்டை இடுகின்றன. ஒரு முறையில் 12 முதல் முப்பது முட்டைகள் இடப்படுகின்றன. இம்முட்டைகள் 48 முதல் 69 நாட்களில் பொரிக்கின்றன. பிறக்கும்போது 20 முதல் 30 cm நீளமுடையனவாக இருக்கும் நாக பாம்புக் குட்டிகளது நச்சுப் பைகள் அவை முட்டையிலிருந்து வெளியேறும் போதே செயற்படக் கூடியன.

கட்டுவிரியன் (Common Krait - Bungarus caeruleus) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் ஒரு விரியன் வகைப் பாம்பு. கொடிய நஞ்சினையுடைய இப்பாம்பு பெரும் நான்கு என்றழைக்கப்படும் பாம்புகளில் ஒன்று. இப்பாம்பு தமிழில் கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
 
புல் விரியன் என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper (Echis carinatus)] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர் நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது.

Daboia head.jpg
 
கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (Taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது.

இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பியில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு லட்சம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.)

ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. இந்தப் பாம்பின் விரைவு மணிக்குப் பன்னிரண்டு கல் (12 mph; 19 km/h) ஆகும். இது 11 அடி நீளம் வளரும்.

மலைப்பாம்புதான் (Asian reticulated python) உலகின் மிக நீளமான பாம்பு. இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் நீளம் முப்பத்து மூன்று அடி (10 m) ஆகும்.

அமேசன் ஆற்றுப்பகுதியில் உள்ள சதுப்புநிலத்தில் உயிர்வாழும் பாம்பு அனாகொண்டா (anaconda). பாம்புகளுள் மிகுந்த எடைகொண்டது இது. பிடிபட்ட 27 அடி 9 அங்குலம் நீளமுள்ள ஓர் அனாகொண்டாவின் எடை ஏறத்தாழ 227 கிலோகிராம் (500 பவுண்டு) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நச்சுப் பாம்புகளுள் மிகச் சிறியது தெற்கு ஆப்பிரிக்காவில் நமிபியா நாட்டில் காணப்படும் நமாகுவா குறும்பாம்பு (Namaqua dwarf adder) ஆகும். முழு வளர்ச்சி அடைந்த பாம்பு எட்டு அங்குல (20 cm) நீளம் மட்டுமே இருக்கும்.

மூன்று கரீபியன் தீவுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பாம்பு நூல் பாம்பு (thread snake) எனப்படுகிறது. பாம்புகளுள் மிகச் சிறியது இது. இந்தப் பாம்பினத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறிய பாம்பின் நீளம் நாலேகால் அங்குலம் (10.8 cm) ஆகும்.

மேலும் ஒரு செய்தி:

மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை விரியன் பாம்புதான் ( Gaboon viper) பாம்புகளுள் மிக நீளமான நச்சுப் பற்களைக் கொண்டது. இதன் நச்சுப் பற்களின் நீளம் இரண்டு அங்குலம் (5 cm) ஆகும்.

நன்றிகள்:
 
தமிழ்விக்கீபீடியா
 
நம்பி – நனவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...