திங்கள், 9 ஜனவரி, 2012

ஃபிரிட்ஜில் எவ்வளவு காலம் உணவுப் பொருட்களை வைக்கலாம்?

இப்பொழுது பெரும்பாலான வீடுகளிலும்  ஃபிரிட்ஜ் இருப்பதால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காய்கறி வாங்க வேண்டும், தினமும் சமையல் செய்ய வேண்டும், மேலும் சமைத்ததை உடனுக்குடன் செலவு செய்துவிட வேண்டும் போன்ற கவலைகள் எதுவும் கிடையாது, என்றாலும் வாங்கி வரும் ஒரு சில பொருட்கலளை வெளியில் வைத்திருந்தும் பயன்படுத்தலாம். அவ்வாறு எங்கு வைத்திருந்தாலும் சரி அவைகளை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் வைத்திருந்து பயன்படுத்திவிட வேண்டும் இல்லாவிடில் சத்துக்களை இழந்த வெறும் சக்கையை சாப்பிடுவதுப் போல் பலனேதும் இருக்காது. மேலும், ஃபிரிட்ஜை சரியான சீதோஷ்ண  நிலையில் வைத்திருப்பது அவசியம், அதாவது அதிலிருக்கும் தெர்மாஸ்டேட் 37 டிகிரி  முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட சீதோஷ்ண நிலையில் இருத்தல் வேண்டும் இதனால், ஃபிரிட்ஜில் இருக்கும் உணவுப் பொருட்கள், நீண்ட நாட்களுக்கு கெடாமல் பிரஷ்ஷாகவும் இருக்கும். அவ்வாறு இருக்க எந்தெந்த பொருட்களை எவ்வளவு காலம் பிரஷ்ஷாக வைத்திருந்து  பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

முதலில் பழங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்:

ஆப்பிள்: இதை ஃபிரிட்ஜியில் 2   வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3  நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6   நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்,
ஆரஞ்சு, கமலா, கிரேப் ஃ புரூட், இதனை 2   வாரங்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்
பைனாப்பிள் - நன்கு பழுத்த பிறகு ஃபிரிட்ஜில் 3 - 5 நாட்கள்
தர்பூசணி துண்டு - ஃபிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம்

எலுமிச்சை- இரண்டு வாரம் வைக்கலாம்
பெர்ரி  பழ வகைகள்-  பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.
பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு ஃபிரிட்ஜில் 3 -5   நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகள்:
பீன்ஸ்- இதை நன்கு கழுவி, ஃபிரிட்ஜில் வைத்திருந்து  3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.
கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், ஃபிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 -4  நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

தக்காளி- வெளியில், ஃபிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
கேரட்- நன்கு  கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
பீட்ருட்-  இரண்டு வாரம் வைத்திருக்கலாம். காலிபிளவர்,
முள்ளங்கி-- இரண்டு வாரம் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
வெண்டைக்காய்- 5 - 7   நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்
உருளைக்கிழங்கு- வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்
வெங்காயம்- வெளியில் காற்றோட்டமான  இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்

குடமிளகாய்- நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.
கீரைவகைகள்- பிளாஸ்டிக் பையில் 3 - 5  நாட்கள் வைக்கலாம்.
முட்டகோஸ், செல்லரி,- பிளாஸ்டிக் பையில் 2  வாரங்கள் வைக்கலாம்.
புரோக்லி, மஷ்ரும்  - அதிகபட்சம் 2 -3  நாட்கள் வைக்கலாம்.
பூசனிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம்.

அசைவ வகைகள்:
முட்டை- ஃபிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயப்னடுத்துவது நல்லது.

வேக வைத்த முட்டை- ஃபிரிட்ஜில் 5 -6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
முட்டை வெள்ளைகரு-  ஃபிரிட்ஜில் 2  -3- நாட்களுக்குள்
முட்டையின் மஞ்சட் கரு- 2 -4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2  நாட்கள் வைத்திருக்கலாம்.
பிரஷ் மட்டன், பீஃப் - 1 -3  நாட்கள் வைக்கலாம். மீன்- 1 - 2  நாட்கள் வைக்கலாம்.

மீன் க்பிள்ளட்ஸ்/ துண்டுகள்- நான்கு நாட்கள் வைக்கலாம்.

இறால், நண்டு - ஃபிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.

சமைத்த இறைச்சி- நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
 
மற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற டெயிரி/dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும்  தடுக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக, எப்போதும் ஃபிரஷாக உண்ண வேண்டுமானால்...
 
1.முதலில், அவைகளை  தரமான பொருளாக பார்த்து வாங்க வேண்டும்.

2.வாங்கியதை, அந்தந்த இடத்தில் பதப்படுத்திவிட வேண்டும்.
3.திட்டமிட்டு,  பொருட்களை உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும்.

நன்றி: ஈமெயில் மூலம் கிடைத்தச் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...