செவ்வாய், 17 ஜனவரி, 2012

தம்பதியரிடையே புயலாக மாறும்! - மௌனம்!

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவே நேரமில்லாமல் தானே ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் அவ்வாறு நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு கைப்பேசியும் ஒரு சாதமாகி விட்டது.
சாப்டியா? குளிச்சியா? தூங்கினியா? என்று அதிலேயே குடித்தனம் நடத்திக் கொள்கின்றார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி சிலர், பிரச்சனைகளுக்கு பயந்து இன்னும் கூறினால் எதற்கு வம்பு என்று "நான் அதிகமா பேசுவதையே நிறுத்திக் கொண்டேன்" என்று கூறும் தம்பதியர்களும் இருக்கத்தான் செய்கின்ரார்கள். இம்மாதிரியான அலட்சிய மனப்போக்கு தான் மிகப் பெரிய விரிசல்களை அவர்களின் வாழ்க்கையில் உண்டாக்கி விடுகின்றது. ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு பேச மறுப்பவர்களை என்னவென்று சொல்லுவது?

பொதுவாக பார்த்தால் கணவன் மனைவி என்றாலே அவர்களின் ரசனைகளும் விருப்பு வெருப்புகளிலும் பல வேற்றுமைகள் இருக்கத் தான் செய்யும். அதனால் அவர்களிடையே அடிக்கடி பிரச்சனைகள் வருவதும் சகஜம். ஆனால் அவ்வாறு ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக கணவன் மனைவியிடத்திலும் மனைவி கணவனிடத்திலும் பேசுவதையே நிறுத்திக் கொண்டேன் என்று கூறுவது முற்றிலும் தவறான கொள்கை,அது ஆரோக்கியமான அணுகுமுறையுமல்ல. அவ்வாறு பேசாமல் இருப்பதை வாய் வேண்டுமானால் நிறுத்திக் கொள்லலாம் ஆனால் மனதாகப்பட்டது சும்மா இருக்காது.

அப்போதுத்தான் அது எதிர்த்தரப்பினரின் குணாதிசயங்களையெல்லாம் ஆராய்ட்சி செய்யத் தொடங்கும் அவர்களிடமிருக்கும் பிடிக்காத விசயங்களைஎல்லாம் நினைவூட்ட அங்கு நிலவும் மெளனமே அதற்கு பாதகமாகி இதனால் கோபம் பில்டப்பாகி ஒருநாளைக்கு அவை புயலாக வீசும். இந்நிலைக்கு தள்ளப்படுவது இந்த மெளனம் தரும் சன்மானமேயன்றி வேறு என்னாவாய் இருக்க முடியும்.ஆகவே அவ்வாறு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் மனதை பாதிக்கும் எந்த ஒரு சிறிய விசயமேயானாலும் கணவனும் மனைவியும் அதை தங்களூக்குள் பகிர்ந்துக் கொண்டால் குடும்பத்தில் பிரச்சனையே வராது.

அவ்வாறு பிரச்சனை என்று வந்து விட்டால் அவை எல்லையைத் தொடும் முன்பே அதைப் பற்றி தீர்மானமாய் பேசி விடுவது தான் நல்லது.அவ்வாறு பிரச்சனைக்குரிய விசயங்களை அவற்றை வெளிப்படையாக பேசும் போதே அதன் வீரியம் நிச்சயம் குறைந்து அதற்கு தீர்வும் கிடைத்திடும். எனவே பிறகு பார்க்கலாம் என்றும் அல்லது சொல்லத் தேவையில்லை என்றும் அலட்சியமாய் இருப்பதுத் தான் மிகவும் ஆபத்தை உண்டாக்கி விடூம். ஆகவே தான் மன நல மருத்துவர்களும் தம்பதியரை மனம் திறந்து பேசும்படி அறிவுறுத்துகிறார்கள்.ஆனாலும்அதை தவறாக புரிந்துக் கொண்டு பழைய குப்பைகளையெல்லாம் கிளற தேவையில்லை அதற்கு அவசியமும் கிடையாது,தம்பதியர்கள் அவர்கள் சபந்தப்பட்ட விசயங்களை மனம் விட்டு பேசினாலே போதும் தீர்க்கப்படாத பிரச்சனை என்று எதுவும் இருக்க முடியாது.அதற்கு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் மனதை பாதிக்கும் எந்த ஒரு சிறிய விசயமேயானாலும் கணவனும் மனைவியும் அதை அவர்களூக்குள் பகிர்ந்துக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது நல்ல்து.

சிலரின் சுபாவமே எப்போதும் மெளனமாய் இருப்பார்கள் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள் அளந்து தான் பேசுவார்கள் விருப்பு வெறுப்பு எல்லாவற்றிற்கும் ஒரே பாவனைதான் இருக்கும். அவர்களை ஒரு சாதாரண சாமான்யரால் ஒன்றும் செய்யமுடியாது என்றாலும் மருத்துவ உதவியுடன் சில பயிற்சிகளின் மூலம் அவர்களின் சுபாவத்தை கட்டாயம் மாற்ற முடியும். மற்றபடி பொதுவாக தம்பதியர்கள் அனைவரும் நிறைய பேச வேண்டும என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

உலகில் வாழும் ஜீவராசிகளில் பேசும் திறன் படைத்தவர்கள் மனிதர்கள் தானே! அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் மெளனம் காப்பது மனித குலத்துக்கே முக்கியமா தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் துரோகமாகாதா?

பேசுங்க! பேசிக்கிட்டே இருங்க! உங்கள் வாழ்வில் சந்தோஷ மழை பொழியட்டும்!

நன்றி: இணையத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...