இன்றைய அவசர உலகின் நேர நெருக்கடியில் சமைக்க நேரமுமில்லாமல் அவஸ்த்தைப்படும் குடும்பங்களுக்கு ஒரு சாதனமாக வந்து வாய்த்துள்ளது தான் இந்த மைக்ரோவேவ் ஓவென் சமையல் என்றால் மிகையாகாது.
இது சமையலை விரைவாக சமைக்க உதவுவதால் சமையலறையில் செலவிடும் அதிகப்பட்ச நேரத்தை பாதியாக குறைத்துவிடுகின்றது. பொதுவாக ஒரு மணிநேரத்தில் சமைக்ககூடிய உணவை பதினைந்து நிமிடத்தில் இதில் தயாராகிவிடும்.
பொருட்கள் வேக எடுக்கும் நேரம் மிகவும் குறைவு என்பதால் உணவுப் பண்டங்களின் சத்தும் வீணாவதில்லை. மேலும் இதில் சமைத்த அசைவ உணவுகளில் கொழுப்பு சத்து குறைந்து இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.
இதற்கென்று கிடைக்கும் பிரத்தியேக உபகரணங்களைக் கொண்டு சுலபமாகவும் சுவையாகவும் சமைக்கலாம். அதைவிட சிக்கனமாகவும் சமைத்து பணவிரயத்தையும் தடுக்கலாம். ஆகவே சமையலறையில் இனிமேல் அதிக நேரம் நின்றுக் கொண்டு அவதிப்படத் தேவையில்லை அந்த வகையில் மைக்ரோவேவின் பயன்கள் மற்றும் அதை எப்படி பயன்படுத்துவதென்று பார்க்கலாம்.
1. இதில் சமைப்பதால் நாம் சாராரணமாக பயன்படுத்துவதுப் போன்ற அதிக பாத்திரங்கள் தேவைப்படாது.
2. எப்போதும் மூடியே இருக்கும் வீடுகளில் நிலவும் மசாலா மணம் இதனால் அறவே இருக்காது.
3. சாதாரணமாக நமது இந்திய சமையலில் உண்டாகும் நெடி எதுவும் இதனால் வெளியே வராது.
4. சமையலறையை சுத்தப்படுத்துவதும் வேலை குறைந்துவிடும்.
5. முக்கியமாக ஸ்டவ்வில் உண்டாகும் கரைகளை எப்போதும் துடைத்துக் கொண்டிருக்கும் வேலை இருக்காது இதனால் சமையலில் ஆர்வமும் கூடும். அப்படியா....சொல்லவேயில்ல.....
இனி அதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. காய்கறிகளை கலவையாக சேர்ப்பதானால் ஒரே சீரான அளவில் நறுக்க வேண்டும் இதனால் சீராக வேகும்.
2. புளியை ஊ ரவைக்க நேரமில்லைஎன்றால் இதில் முப்பது வினாடிகள் வைத்தெடுத்து சுலபமாக கரைத்துவிடலாம்.
3. ஆரஞ்சு எலுமிச்சை போன்ற பழங்கலை இதில் ஒருசில வினாடிகள் வைத்து எடுத்து பின்பு ஜுஸ் பிழிந்தால் அதிகப் பட்ச சாறு கிடைக்கும்.
4. வெண்ணெயிலிருந்து சுவையான நெய்யை தயாரிக்கலாம்.
5. பால் சேர்க்கும் பாயசம் போன்ற இனிப்பை இதில் செய்யும் போது பாத்திராம் சற்று பெரியதாக இருக்க வேண்டும் இதனால் பொங்கி வழியாது.
6. குழம்புகள் செய்யும் போது அடுப்பில் வைப்பதுப் போன்று நீர் அதிகம் தேவைப்படாது சரியான அளவில் வைத்தால் போதும்.
7. கத்திரிகாய் குடமிளகாய் போன்ற காய்களின் தோலை உரிக்க 5 நிமிடம் வைத்து பின்பு மூடி வைத்து உரிக்கலாம்.
8. பருப்புவகைகள் தானியங்களை வேகவிடும் போது உப்பைத் தவிரத்தால் சுலபமாக வெந்துவிடும்.
9. அதைப் போல் அசைவ உணவுகளிலும் ஊ ரவைத்து சமைப்பதென்றால் அதிலும் உப்பை குறைவாக போட்டு பின்பு சேர்த்துக் கொள்ளலாம்.
10. உணவுப் பண்டங்களை மூடிப் போட்டு சமைத்தால் வேக மிகவும் குறைந்த நேரமே எடுக்கும்
11. இறால் மீன் போன்ற கடல் உணவுகள் மிகவும் குறைந்த நிமிடத்தில் வெந்துவிடும்.
12. கோழியை சமைக்கும் போது சதைப் பகுதியை பாத்திரத்தில் விளிம்பில் வைத்தால் சீராக வேகும்.
13. பொரியல் வகைகள் செய்யும் போது மிகவும் குறைந்த நிமிடத்தில் வைத்து பின்பு ஸ்டேன்டிங் டைம் என்றபடி ஒரு சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு எடுத்தால் அதிகப்படியான சத்துக்கள் வீணாவதைத் தடுக்கலாம்.
14. புலாவ் பிரியாணி போன்ற அரிசி உணவுகள் குறைந்த பட்சன் 15 நிமிடத்தில் தயாராகிவிடும்,ஆனால் அதில் சேர்க்கும் நீரை ரெஸிப்பியில் இருப்பதுப் போன்று மொத்தமாக ஊற்ற வேண்டிய அவசியமில்லை அரிசி பாதி வெந்த பின்புகூட மீதி நீரை ஊற்றி வேக வைக்கலாம்.
15. எண்ணெயே இல்லாமல் பாப்கானைப் பொரித்துவிடலாம்.
இதில் செய்யக் கூடாதவைகள்
1. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை வைக்கக் கூடாது.
2.ஃபாயில் பேப்பரையும் பயன்படுத்த கூடாது
3. முட்டைகளை அதன் தோலோடு வேகவிடக் கூடாது.
4. பாட்டில்களை மூடி போட்டு சூடுபடுத்தக் கூடாது.
5. எண்ணெயில் பொரிக்க கூடாது.
நன்றி: மனோரஞ்சிதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக