வெள்ளி, 6 ஏப்ரல், 2012

டிரான்ஸ் கொழுப்பு (Trans Fat) - ஒரு பகீர் தகவல்!

டிரான்ஸ் கொழுப்பு (Trans Fat):

திரவநிலையிலிருக்கும் பூரிதமாகாத கொழுப்பின் மதிப்பை அதிகப்படுத்துவதற்காக 'ஹைட்ரஜனேற்றம்' செய்யப்படுவதால் டிரான்ஸ் கொழுப்பு  உருவாகிறது. இது திடநிலையில் இருக்கும். துரித உணவுகளிலும், பேக்கரி பொருள்களிலும், ஜங்க் ஃபுட்ஸ் என்று சொல்லப்படுகிற மேகி, நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கேஎப்சி சிக்கன் போன்ற பொறிக்கப்பட்ட உணவுகளிலும் இந்த வகைக் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலைப் பொறுத்தவரை வில்லனாகவே கருதப்படுகிறது.

இருப்பதிலேயே மிக மோசமான கொழுப்பு என்று இதைக் குறிப்பிடலாம். செல்லைச் சுற்றியுள்ள சவ்வில் கொழுப்பு அமிலங்கள, இந்த கொழுப்பு அதிகமாக சேர்வதன் காரணமாக சேதமடைகின்றன. இதனால் சவ்வின் ஊடுருவும் தன்மையும் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இத்தகைய பாதிப்புக்குள்ளான சவ்வு முற்றிலுமாக சேதமடைந்து புற்றுநோய், ஆர்த்ரைடிஸ், இதய நோய்கள் போன்றவை ஏற்பட வழிவகுத்து விடுகிறது. இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் உருவாகும் வாய்ப்பை டிரான்ஸ் கொழுப்பு 93 சதவீதம் அதிகப்படுகிறது.

இந்த கொழுப்பு கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பொருட்கள் பாக்கெட்டின் மேல் உள்ள லேபிளில் Partially Hydrogenated என்று குறிப்பிட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். Hydrogenated எனற வார்த்தை இருந்தாலே அது டிரான்ஸ் கொழுப்பு இருப்பதாககத் தான் அர்த்தம்.இதை மறைத்தே உணவு பக்கெட்டுகளில் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதைக் கண்டறிய வழி: லேபிளில் பூரிதமான கொழுப்பு, பூரிதமாகாத கொழுப்பு மற்றும் மொத்தக் கொழுப்பின் அளவைக் குறிப்பிட்டிருப்பார்கள். பூரிதமான மற்றும் பூரிதமாகாத கொழுப்பு ஆகியவற்றைக் கூட்டி, மொத்த கொழுப்பில் இருந்து அதைக் கழித்தால் வருகிற அளவுதான் டிரான்ஸ் கொழுப்பின் அளவு.

சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது:

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி, நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந் தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உணவுகள்:

இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. மேகி, நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன்:

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதி களுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள்:

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.

எனவே, அடிக்கடி பெப்ஸி, கோக், மேகி, நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க.   நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.
 
நன்றி:
 
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
புது டெல்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...