திங்கள், 7 மே, 2012

இரத்த தானம் (Blood Donation) - ஒரு கண்ணோட்டம்!

மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல! உங்கள் இரத்த தானத்தின் மூலமும் வெளிப்படுத்தலாம்.

இரத்த தானம் என்றால் என்ன?

இரத்த தானம் (குறுதிக் கொடை) என்பது தேவைப்படும் இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி சேமித்து வைத்தலாகும்.  ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 4.5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது.  இரத்த தானம் செய்பவர் உடலில் இருந்து ஒரு நேரத்தில் 400 முதல் 500 மில்லி லிட்டர் இரத்தம் வரை எடுக்கப்படும்.  அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் தானாகவே மீண்டும் உடலில் உற்பத்தியாகிவிடும்.  இரத்தம் குறைந்துவிட்டதே என்ற தவறான கருத்து தேவையில்லை.  இரத்தத்தில் உள்ள இரும்பு சத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள இரத்த தானம் உதவுகிறது.  இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பு இரத்த தானம் செய்யும் போது சீரடைகிறது.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.  இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பாணுக்கள் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கான தகுதிகள்:

1. வயது 18 முதல் 55 வரை.

2. உடல் எடை 50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

3. இரத்த தானம் செய்யும் 4 மணி நேரத்திற்குள் நல்ல உணவு உட்கொண்டிருக்க வேண்டும்.

4.  இரத்த தானம் செய்யும் நாளுக்கு முதல் நாள் இரவு கண்டிப்பாக நல்ல தூக்கம் முக்கியம்.

யாரெல்லாம் இரத்த தானம் அளிக்கக் கூடாது?

எயிட்ஸ், கேன்சர், நீரழிவு நோய், மஞ்சள் காமாலை, மலேரியா, இதய நோய், காச நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்,  சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பழுதடைந்தவர்கள், இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் அளிக்க இயலாது. கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள், தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் ஆகியோரும், பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்திலும் இரத்ததானம் செய்ய இயலாது.

இரத்த தானம் பற்றிய மேலும் தகவல்கள்:

1. இரத்த தானம் செய்ய எவ்வளவு நேரமாகும்? 

குறைந்தது 15 நிமிடங்களிலிருந்து  அதிகபட்சம் 1/2 மணி நேரமாகும்.

2. எத்தனை மாத இடைவெளியில் இரத்த தானம் செய்யலாம்?

குறைந்தது 3 மாத கால இடைவெளியில் இரத்த தானம் செய்யலாம்.

3. இரத்த தானம் செய்த பின் என்ன செய்ய வேண்டும்?

திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அனைத்து வேலைகளையும் செய்யலாம்.

4. இரத்த தானம் செய்யக் கூடிய இரத்தம் யாருக்குப் பயன்படுகிறது?

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர், இதய அறுவை சிகிச்சை செய்வோர்,  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோர், எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்வோர், கடுமையாக தீக்காயம் பட்டோர், பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் ஏராளமானோர்.

கவனம்:

ஆனால் இரத்த தானம் அளிக்கும்போது நம்மிடம் இருந்து இரத்தம் எடுக்கப் பயன்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் புதிதாக பயன்படுகின்றனவா என்பதை மட்டும் சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இரத்த தானம் செய்வீர்!  இறையருளைப் பெறுவீர்!

"(இறைவா!) எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக!"  (7:156).

நன்றி:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இணையத்திலிருந்து...மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல! உங்கள் இரத்த தானத்தின் மூலமும் வெளிப்படுத்தலாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இணையத்திலிருந்து...

2 கருத்துகள்:

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...