புதன், 30 மே, 2012

அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ் வந்தால் அஜாக்கிரதை கூடாது!

இந்த பதிவினை தொகுத்து பதிவிட என்னைத் தூண்டியது என்னுடைய தங்கையின் வேதனை மட்டுமே!  காரணம் என் தங்கை சமீபத்தில் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸால் அவதிபட்டதே முக்கிய காரணம்.  உலகில் உள்ள அனைவரும் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ்  பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமே எனது முக்கிய அவா...

குழந்தைகளுக்கு "அப்பெண்டிசிட்டிஸ்" வந்தால் அஜாக்கிரதை கூடாது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் கூட, குடல்அழற்சி நோய் எனப்படும், "அப்பெண்டிசிட்டிஸ்" கோளாறு வரும். இதன் அறிகுறி தெரிந்தவுடன், டாக்டரிடம் காட்டி, கிசிச்சை செய்வதுதான் சரியான முடிவு.

இந்த விஷயத்தில் கவனக்குறைவு கூடாது. அஜாக்கிரதையாக இருந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும். அடிவயிற்றின் எல்லா பகுதிகளையும், தொற்றுக்கிருமிகள் பாதித்து, கோளாறு முற்றிவிடும்.
அப்பெண்டிசிட்டிஸ் என்றால்...அப்பெண்டிக்ஸ் அல்லது அப்பெண்டிசிட்டிஸ் என்பது, குடல்வால் அழற்சி என்று பெயர். அதாவது, சிறு, பெருங்குடலில் தேவையில்லாமல் வளரும் சதைப்பகுதி. சிறிய விரல் போல நீட்டிக்கொண்டிருக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும்.

எந்த வயதில் வரும்?

சிறிய குழந்தைகளுக்கு "அப்பெண்டிசிட்டிஸ்" நோய் வந்தால், அதற்கான அறிகுறி வெளிப்படையாக தெரியும். அது தெரிந்தால், உடனே கவனித்து உடனடி சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு வயது குழந்தைக்கு கூட இந்த கோளாறு ஏற்படும்.

என்ன காரணம்?

இந்த கோளாறு ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை மருத்துவ ரீதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கழிவுகள் மூலம் ஏற்படுகிறது என்று மட்டும் சொல்லப்படுகிறது. அது தான், குடலில் சதைப்பற்றை வளர்க்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அறிகுறி என்ன?
இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு வராது. அதற்கு மேல் பலருக்கும் வர வாய்ப்புள்ளது. வயிற்றில் வலி இருக்கும். அதுவும், தொப்புளை சுற்றி வலிக்கும். அதைத்தொடர்ந்து, வலது கீழ்ப்பகுதியில் வலி தொடரும். இந்த அறிகுறியை தெரிந்து கொண்டால், டாக்டரிடம் சென்று விட வேண்டும்.

வேறு அறிகுறிகள்:

வலியுடன் கூடி வாந்தி வரும்; காய்ச்சல் இருக்கும்; பசியெடுப்பது குறையும். அப்படியே சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்; நீர்த்து போகும். படுக்கையை விட்டு குழந்தை எழுந்திருக்காது.
குழந்தை நடக்கும் போதே, சாய்வாகத்தான் நடக்கும். அந்த அளவுக்கு வயிற்றில் வலி இருக்கும். டாக்டரிடம் காட்டாமல், வயிற்று வலிக்கு மாத்திரையோ, பானமோ, சாப்பிடவோ குழந்தைக்கு தரக்கூடாது.
பரிசோதனை செய்யணுமா?குடல்வால் அழற்சி நோய்க்கான அறிகுறியை உறுதி செய்ய, பரிசோதனை எதுவும் இல்லை. ரத்த, சிறுநீர் பரிசோதனை தான் செய்யப்படுகிறது. அதை வைத்துத்தான் "அப்பெண்டிசிட்டிஸ்" உறுதி செய்யப்படுகிறது. சில சமயம், பரிசோதனைகளில் கூட தவறாக காண்பிக்கலாம். ஆனால் டாக்டர் சந்தேகப்பட்டால், அதற்கு சிகிச்சை செய்வதே நல்லது.
சிகிச்சை என்ன...?
குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது கடைசிபட்சமாக வைக்கப்படும். குடல்வால் அழற்சிக்கு காரணமான சதைப்பற்றை நீக்கிவிட மருந்து, மாத்திரை மூலம் சிகிச்சை செய்ய முயற்சி செய்வார் டாக்டர். வேறுவழியில்லாமல் போனால் தான் அறுவை சிகிச்சை பற்றி டாக்டர்கள் முடிவு செய்வர்.

ஆபரேஷன் தேவை:அறுவை சிகிச்சை செய்துதான், அப்பெண்டிசிட்டிஸ் கோளாறை நீக்க வேண்டும் என்று டாக்டர்கள் முடிவு செய்யும் போது, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பர். மயக்கமருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை செய்வர். ஒரு முறை அறுவை சிகிச்சை செய்துவிட்டால், அதன் பின் அந்த கோளாறு வராது. இரண்டு நாளில் அறுவை சிகிச்சை செய்த பின் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும். எனினும், இரண்டு நாளில் சரியாகி, சாப்பிட துவங்கி விடும். நான்கு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவர். அதன் பின், வீட்டில் இரண்டு வாரம் ஓய்வு எடுத்ததும், பள்ளிக்கு செல்லலாம்.

இரண்டு வகை:
குடல்வால் அழற்சி கோளாறை நீக்க, குடலில் நீண்டிருக்கும் சதையை நீக்க, இரண்டு வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஒன்று, திறந்து செய்யும் அறுவை சிகிச்சை. இரண்டாவது, லேப்ராஸ் கோபி முறையில் நடத்தப்படும்.முதல் வகை ஆபரேஷன் தான், பெரியவர்களுக்கு செய்யப்படுகிறது. லேப்ராஸ் கோபி முறை, குழந்தைகளுக்கு பெரிய அளவில் பலன் தராது. அதனால், முதல் வகை ஆபரேஷன் தான் சரியானது.
சிக்கல்கள் உண்டா?
பல அறிகுறிகள் தெரிவதால், டாக்டரிடம் காட்டி சரி செய்வது தான் நல்லது. அப்படியில்லாமல், குடலில் வளர்ந்த சதைப்பற்று வளர்ந்து கட்டியாகி தொற்றுநோய் கிருமிகள் பரவி, அதனால் அது வெடித்துவிடும் ஆபத்தும் உண்டு.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கோளாறு அதிகமாகி விடும். அதனால், அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக உடனே முடிவு செய்ய வேண்டும்; தாமதிக்கக்கூடாது.தடுக்க வழியுண்டா?
"அப்பெண்டிசிட்டிஸ்" கோளாறை தடுக்க சரியான முறைகள் இருப்பதாக தெரியவில்லை. உணவுப்பழக்கத்தை வைத்துத்தான் ஒருவருக்கு இந்த கோளாறு வரும், வராது என்று டாக்டர்கள் சொல்கின்றனர்.அந்த வகையில், நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரவே வராது.பல இணையத்தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது...

2 கருத்துகள்:

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...