அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!
நோக்கம்:
நோன்பு பெருநாள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாள் இறைவனை நினைவு கூறுவதற்கான நாள் என்பது தெளிவாகிறது. ஆனால் இதையெல்லாம மறந்துவிட்டு பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது, மது அருந்துவது, சூதாடுவது போன்ற அனைத்து தீமையான செயல்களையும் இந்த பெருநாளன்றுதான் செய்கிறார்கள்.
சனி, 27 ஆகஸ்ட், 2011
நோன்பு பெருநாள் தர்மம்! - மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதும்!
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!
தலைவலிக்கு மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள்தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...?
வியாழன், 25 ஆகஸ்ட், 2011
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!
An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம்.
புதன், 24 ஆகஸ்ட், 2011
லைலத்துல் கத்ர் இரவு!
லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். மகத்துவமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஓர் இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
என்னென்ன பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
புதன், 17 ஆகஸ்ட், 2011
இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011
நீங்கள் ஐஸ் வாட்டர் விரும்பி குடிப்பீர்களா? - கவனம்!!!
இப்போதெல்லாம்,நகர்புறங்களில் `பிரிட்ஜ்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
புகைப் பிடிப்பவர்களுக்கான பரிசு மழை!
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வாய்ப்பு குறைவு!
வியாழன், 11 ஆகஸ்ட், 2011
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம்
பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
புதன், 10 ஆகஸ்ட், 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (30):
92. பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையப் பார்க்காமல் நோன்பு விடாதீர்கள் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு மேக மூட்டமாக ஏற்பட்டால் எத்தனை நாட்களாக எண்ணிக்கொள்ளுமாறு கூறினார்கள்? முப்பது நாட்களாக எண்ணிக்கொள்ளுமாறு கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல் : புகாரி).
93. மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு மேக மூட்டமாக ஏற்பட்டால் எண்ணிக்கையை எவ்வாறு முழுமைப்படுத்துமாறு கூறினார்கள்? எண்ணிக்கையை முப்பதாக முழுமைப் படுத்துமாறு கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல் : புகாரி).
94. நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் எதைவிடச் சிறந்தது எனக் கூறினார்கள்? கஸ்தூரியை விடச் சிறந்த்தது எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : புகாரி).
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
நாடுகளும் அதன் கொடிகளும் - B வரிசை
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
6. யாருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம் என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்? ஏக இறைவனை மறுப்போருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம். (2:6)
7. (கெட்ட) மனிதர்களும், கற்களும் எதன் எரிபொருள்? நரகத்தின் எரிபொருள். (2:24)
8. எதை உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான்? கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (2:26)
9. எதை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான்? இரத்த பந்த உறவினர்களை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான். (2:27), (13:21)
10. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்" என அல்லாஹ் வானவர்களிடம் கூறியதும் அவர்கள் என்ன கூறினார்கள்? "அங்கே குழப்பத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தோவோரையா படைக்க்போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே! குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறோமே!" என்று வானவர்கள் கூறினார்கள். (2:30)
படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ்! தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)