உட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது.
தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப்பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான்.
இரண்டாவது தான் 'வெர்டிகோ' எனப்படும் தொடர் கிறுகிறுப்பு இதுவும் தலைசுற்றல் மாதிரியே இருக்கிறது. ஆனால் மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பித்து பாதிக்கும். அதிக பட்ச ஆபத்து இதய கோளாறு தான். அதனால், தலைசுற்றலாக இருந்தாலும், கிறுகிறுப்பாக இருந்தாலும் உஷாராக இருந்து, முன்னெச்சரிக்கையாக டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வதே நல்லது.
டெல்லியில் உள்ள மாக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை தலைமை டாக்டர் மிஸ்ரா தரும் சில முக்கிய தகவல்கள்:
சாதாரண தலைச்சுற்றல் போலத்தான் 'வெர்டிகோ'வும் இருக்கும். இந்த பாதிப்பு இருப்போரை இந்த கோளாறு தூங்க விடாது. சரியாக படுக்கவும் முடியாமல் தவிக்க வைத்துவிடும். தலைசுற்றல் ஏற்பட்டவுடன், குமட்டல் இருக்கும். சாதாரண தலைச்சுற்றலில் இந்த நிலை இருக்காது.
'வெர்டிகோ'வுக்கு பல காரணங்கள் உள்ளன. தொடர்ந்து அது தொல்லைபடுத்தியபடி இருக்கும். டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும், அந்த பாதிப்பின் வீரியம் வேண்டுமானால் குறையலாம்; ஆனால் பாதிப்பு தொடரும்.
குறிப்பாக, இந்த பாதிப்பு உள்ளவர்கள், கோடை காலத்தில் உஷாராக இருக்க வேண்டும். ஸ்டெமடில் போன்ற மாத்திரைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
அடிக்கடி தலை சுற்றல் வருவதை வைத்தே அது சாதாரண கிறுகிறுப்பு அல்ல என்று முடிவுக்கு வந்துவிடலாம்.
'வெர்டிகோ' பிரச்சினை உள்ளவர்கள், காபி, சாக்லெட் உட்பட, அதிக இனிப்பு, உப்பு சுவை உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது. மது குடிக்கவே கூடாது.
கோடைகாலத்தில் தான் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாத்திரையை சாப்பிட மறக்கவே கூடாது.
நரம்பு மண்டல பிரச்சினை என்பதால், இதில் அலட்சியம் கூடாது. அப்படி இருந்தால், மூளை நரம்பு மண்டல பாதிப்பு வரை கொண்டுவிட்டு விடும்.
அடிக்கடி தலைவலி, கண்கள் தெளிவின்மை, நாக்குழற பேசுவது, காது மந்தம் போன்றவை 'வெர்டிகோ'வின் அறிகுறிகள்.
கை, கால்களில் பலவீனம், நடந்து கொண்டிருக்கும் போது அடிக்கடி மயக்கம்; குமட்டல் ஆகியவையும் இதன் அறிகுறிகள் தான். இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால், இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படும். வலியும் ஏற்படும்.
நன்றி: டாக்டர் மிஸ்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக