ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்களிடம், 'எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்!' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார்கள். ஆகவே, அவர் நபியவர்களுக்கு "அந்நிஸா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினார். "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படி இருக்கும்?" எனும் (4:41 ஆவது ) வசனத்தை அவர் அடைந்த போது தலையை உயர்த்தினார் அல்லது அவருக்கு பக்கத்திலிருந்த ஒருவர் அவரை தொட்டுணர்த்தியபோது, அவர் தலையை உயர்த்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) - நூல் : முஸ்லிம்).
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வியாழன், 10 மார்ச், 2011
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது!!!
லேபிள்கள்:
ஹதீஸ் - சம்பவங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக