காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க
முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி ,சிலருக்கு டீ
,மற்றும் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியையும் டீயையும்
ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது
.அதற்கான ஐந்து காரணங்கள் இதோ :
1 .விலை
காஃபி ,டீ இரண்டும் வெவ்வேறு தரங்களில் வெவ்வேறு
விலைகளில் கிடைத்தாலும் தரமான காஃபி அல்லது டீயின் விலையை ஒப்பிட்டால் காஃபியின்
விலை அதிகம் .மேலும் காஃபியை விட டீயை அதிக நாட்கள் கெடாமல் வைக்கலாம் .
2 . பல் பாதுகாப்பு
காஃபி ,டீ இரண்டுமே பற்களில் கரையை
ஏற்படுத்துபவை என்றாலும் காஃபி அதிக கரையையும் வாய் துர் நாற்றத்தையும்
ஏற்படுத்துகிறது .ஆனால் டீயில் உள்ள ஃப்லூரைடுகள் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட்கள்
பற்களை உறுதியாக்குகின்றன மேலும் இதிலுள்ள டனின்கள் வாயிலுள்ள கேடு விளைவிக்கும்
பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
3 .இதய ஆரோக்கியம்
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய
நோய்களுக்கும் காஃபிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு .மாறாக டீ
அருந்துவது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது மேலும் அதிலுள்ள டனின் மற்று
கேடசின்கள் இதய நோயையும் கேன்சரையும் தடுக்கக் கூடியது .
4 .குறைவான காஃபின்
காஃபியில் தேயிலையை விட அதிக காஃபின் உள்ளது
.டீயிலுள்ள காஃபின் இரத்தத்தில் மெதுவாகவே கலக்கிறது. காஃபியைப் போல் உடல்
நடுக்கத்தையோ படபடப்பையோ உண்டாக்குவதில்லை .
5 .சுற்றுசூழல் பாதுகாப்பு
தேயிலை விவசாயத்திற்கு காடுகள்
அழிக்கப்படுவதில்லை ,மாறாக காபி விவசாயத்திற்கு மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன
,அதிக அளவு பூச்சி கொல்லி மருந்துகளும் இரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன
மேலும் காஃபி ஆலைகள் மூலம் காற்றிலும் மாசுகள் கலக்கின்றன .
இப்போது நீங்களே சொல்லுங்கள் எது நல்லது?
நன்றி : லாரி ஜெங்கின்ஸ் ,நேக்டு ஹெல்த்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக