திங்கள், 29 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)11.எதை நெருங்க வேண்டாம் என ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்? இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்! என அல்லாஹ் கூறினான். (2:35)

12.அறிந்துகொண்டே எதனுடன் எதனை கலக்கக்கூடாது? அறிந்துகொண்டே சரியானதை தவறானதுடன் கலக்கக்கூடாது. உண்மையை மறைக்கக்கூடாது. (2:42)
13.எதன் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்? பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும். (2:45), (2:153)
14.பொறுமை மற்றும் தொழுகை – இவைகள் யாரைத் தவிர மற்றவர்களுக்கு பாரமாகவே இருக்கும்? அல்லாஹ்விடத்தில் உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பாரமாகவே இருக்கும். (2:45)
15.உலகத்தார் அனைவரையும் விட அல்லாஹ் யாரை மேன்மைப்படுத்தினான்? இஸ்ராயீல் மக்களை உலகத்தார் அனைவரையும் விட அல்லாஹ் மேன்மைப்படுத்தினான். (2:47), (2:122)
16. ஒருவன், இன்னொருவனுக்கு எந்த பயனும் அளிக்க முடியாத நாள் – என அல்லாஹ் குறிப்பிடும் நாள் எது? மறுமை நாள். (2:48)
17.மூஸா நபிக்கு எத்தனை இரவுகள் அல்லாஹ் வாக்கு கொடுத்தான்? நாற்பது இரவுகள். (2:51)
18.வேதத்தை அல்லாஹ்விடம் பெறுவதற்கு மூஸா நபி சென்றபின் அவரது சமூகத்தினர் எதைக் கடவுளாக வணங்கினர்? காளைக் கன்று. (2:51)
19.மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பமாட்டோம் என்று கூறிய அவரின் சமுதாயம் எதைக் கொண்டு, எவ்வாறு தாக்கப்பட்டனர்? அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, இடி முழக்கம் கொண்டு தாக்கப்பட்டனர். (2:55)
20.அல்லாஹ்வை நேரில் பார்க்காது நம்பவே மாட்டோம் என்று கூறியதால் இடிமுழக்கம் கொண்டு தாக்கப்பட்ட சமுதாயம் எது? மூஸா (அலை) அவர்களின் சமுதாயம். (2:55)
 
படிப்போரின் பார்வைக்காக:
 
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு  வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன்.  இன்ஷா அல்லாஹ்!  தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,) 

11.எதை நெருங்க வேண்டாம் என ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்? இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்! என அல்லாஹ் கூறினான். (2:35)

12.அறிந்துகொண்டே எதனுடன் எதனை கலக்கக்கூடாது? அறிந்துகொண்டே சரியானதை தவறானதுடன் கலக்கக்கூடாது. உண்மையை மறைக்கக்கூடாது. (2:42)
13.எதன் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்? பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும். (2:45), (2:153)
14.பொறுமை மற்றும் தொழுகை – இவைகள் யாரைத் தவிர மற்றவர்களுக்கு பாரமாகவே இருக்கும்? அல்லாஹ்விடத்தில் உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பாரமாகவே இருக்கும். (2:45)
15.உலகத்தார் அனைவரையும் விட அல்லாஹ் யாரை மேன்மைப்படுத்தினான்? இஸ்ராயீல் மக்களை உலகத்தார் அனைவரையும் விட அல்லாஹ் மேன்மைப்படுத்தினான். (2:47), (2:122)
16. ஒருவன், இன்னொருவனுக்கு எந்த பயனும் அளிக்க முடியாத நாள் – என அல்லாஹ் குறிப்பிடும் நாள் எது? மறுமை நாள். (2:48)
17.மூஸா நபிக்கு எத்தனை இரவுகள் அல்லாஹ் வாக்கு கொடுத்தான்? நாற்பது இரவுகள். (2:51)
18.வேதத்தை அல்லாஹ்விடம் பெறுவதற்கு மூஸா நபி சென்றபின் அவரது சமூகத்தினர் எதைக் கடவுளாக வணங்கினர்? காளைக் கன்று. (2:51)
19.மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பமாட்டோம் என்று கூறிய அவரின் சமுதாயம் எதைக் கொண்டு, எவ்வாறு தாக்கப்பட்டனர்? அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, இடி முழக்கம் கொண்டு தாக்கப்பட்டனர். (2:55)
20.அல்லாஹ்வை நேரில் பார்க்காது நம்பவே மாட்டோம் என்று கூறியதால் இடிமுழக்கம் கொண்டு தாக்கப்பட்ட சமுதாயம் எது? மூஸா (அலை) அவர்களின் சமுதாயம். (2:55)
 
படிப்போரின் பார்வைக்காக:
 
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு  வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன்.  இன்ஷா அல்லாஹ்!  தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,) 1 கருத்து:

  1. நண்பரே.. கடந்த 27ம் தேதி தமிழகத்தை சேர்ந்த 130 பேர்களை ஹஜ் அழைத்து செல்வதாக கூறி குடந்தை ஹஜ் சர்வீஸ் ஏமாற்றி உள்ளது...ஆனால் இது பத்திரிக்கையில் வெளி வரவில்லை.. இது பற்றி நான் ஒரு பதிவு எழுதி உள்ளேன்... தயவு செய்து தாங்கள் இதை தங்களது வலையில் வெளியிட்டு அந்த போலி குடந்தை ஹஜ் சர்வீஸின் முகத்திரையை கிழிக்க உதவுமாறு கேட்டு கொள்கின்றேன்..

    இது முழுக்க முழுக்க உண்மை பாதிக்க பட்டவர்களில் எனது மூத்த சகோதரியும் ஒருவர்..

    http://writetamil.weebly.com/2965300929752984302129803016-300129723021-2970299230212997300830003021.html

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...