வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!

தலைவலிக்கு  மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள்தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...?

வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் மாத்திரைகளும் நாளடைவில் காது கேட்காமல் செய்து விடக் கூடியவை என்கின்றன சமீபத்திய சில சர்வேக்கள். சர்வதேச மருத்துவ இதழ்கள் இவற்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கின்றன.

சர்வே சொல்வது சரியா? சென்னையைச் சேர்ந்த-காது -மூக்கு -தொண்டை (ENT) டாக்டர்  குமரேசன் கூறுகிறார்:  "மறுக்க முடியாத உண்மை தான், காசநோய்க்காக ஸ்ட்ரெப்டோமைசின் எடுத்துக்கிட்ட நிறையப் பேருக்கு காது கேட்காமப் போன சம்பவம் நிகழ்ந்தபோதுதான் முதன்முதலா மருத்துவ உலகத்துக்கே இந்த பாதிப்பு பற்றி தெரிய வந்தது. நோய்க்குன்னு தரப்படுகிற நிவாரண மருந்துகள் எல்லாமே ஏதாவது பக்க விளைவை சின்ன அளவிலயாவது உண்டாக்கும் தான், ஆனா இந்த மருந்துகள் காதை எதுக்கு ரிப்பேராக்குதுங்கிறது தான் இன்னும் விடை தெரியாத கேள்வியா இருக்கு. இது சம்பந்தமா ஆராய்ச்சிகள் போய்ட்டிருக்கு. இந்தியாவுல கூட இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கு. சமீபமாக காது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு, கேட்கும் திறனை இழந்த நிறைய பேர், இந்த வலி நிவாரணிகளோட பக்க விளைவுகளால தான் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்லுது" என்கிற குமரேசன். இதனால் ஏற்படும் பாதிப்பை இப்படி விளக்குகிறார்...
 
"தொடர்ச்சியாக ஏதாவது ஒரு வலி நிவாரணி மருந்தை எடுத்துட்டிருக்கிறவங்களுக்கு காதுகளில் ஒருவித தேவையில்லாத இரைச்சல் கேட்க ஆரம்பிக்கிறது தான் முதல் அறிகுறி. அதாவது மருந்து அதோட பக்க விளைவுகளை செயல்படுத்த ஆரம்பிச்சதும் உள் காதுல உள்ள நத்தை எலும்பு பாதிக்கப்பட்டு அதோட தாக்கம்தான் அந்த இரைச்சல், கூடவே வார்த்தைகளை கேட்டுப் புரிஞ்சுக்கிறதுல ஒருவித குழப்பம் வரும். தொடர்ந்து உச்சரிப்புத் தன்மை அதிகமா உள்ள (High Frequency) வார்த்தைகளோட சத்தம் வெவ்வேறாக் கேட்க ஆரம்பிக்கும், ஒருகட்டத்துல சுத்தமா கேக்காமப் போகும். பிறகு மத்த எல்லா வார்த்தைகளும் பாதிக்கப்படப்போறதைக் காட்டும் விதமா லேசான அடைப்பு மாதிரி தெரியும். அதற்கு பிறகும் நாம கவனிக்கலைன்னா தான், கடைசியில நிரந்தரக் காதுகேளாமையில் போய் முடியும்.

பெரும்பாலும் கருவுற்ற தாய்மார்களுக்கும், அறுபது வயதைக் கடந்தவர்களுக்கும் தான் இந்த தாக்குதல் அபாயம் அதிகமா இருக்கு. தவிர, ஏற்கனவே காதுகள்ல வேற பிரச்சினை இருக்கிறவங்களையும் இது உடனடியா பாதிக்குது!

உள்காதில் ரத்த ஓட்டம் முழுமையாகத் தடைபடும். இந்த பிரச்சினையில் இரண்டு வகைகள் இருக்கின்றனவாம். முதலாவது வகை மருந்துகள் மோசமானவை. எடுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே நிரந்தரக் காதுகேளாமையை உண்டாக்கி விடுகின்றன. இரண்டாவது வகையில் இருக்கும் சில மருந்துகளை காதில் பாதிப்பு தெரிய ஆரம்பித்ததும் நிறுத்திவிட்டால், பாதிப்பும் சரியாகி நார்மலாகி விடுமாம்.

சரி, பாதிப்புக்கு உள்ளாகிறவர்களுக்கு சிகிச்சை இருக்கின்றதா? "முதல்ல ஆடியோகிராம் டெஸ்ட் எடுக்கணும். எந்த மருந்து பாதிப்புக்குக் காரணம்னு கண்டுபிடிச்சி அந்த மருந்தை நிறுத்த சொல்லி விடுவாங்க. அடுத்து உள்காதோட இயக்கங்கள் பத்தி மருந்துகளால் பாதிப்பு எந்த அளவுக்கு தாக்க ஆரம்பிச்சிருக்குன்னு கண்டுபிடிக்கிற சோதனை. மூணாவதா பெரா டெஸ்ட்ன்னு ஒரு டெஸ்ட். இந்த டெஸ்டுகளைத் தொடர்ந்து ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மாத்திரைகள் இருக்கு" என்கிறார் குமரேசன். இப்படி இன்னொருபுறத்தில் பிரச்சினைகளை கிளப்பிவிடுகின்ற வலி நிவாரணியை எதற்கு பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்!"

ஒரு நோயின் பாதிப்பு அதுக்கு கொடுக்கற மருந்துகளால ஏற்படுகிற பக்க விளைவுகளை விட ஆபத்தா இருக்கிற பட்சத்திலதான் அந்த மருந்தைப் பரிந்துரைக்கிறாங்க என்கிற குமரேசன், இப்படிச் சில ஆறுதலான வார்த்தைகளைச் சொல்கிறார்... "உணவுப் பழக்கத்துக்கும் ஒரு முக்கிய சோல் இருக்கு. வைட்டமின் ஏ, சி, இ அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமா சேர்த்துக்கிறவங்களை இந்தப் பக்க விளைவுகள் நெருங்கப் பயப்படுறதா கண்டுப்பிடுச்சிருக்காங்க!
 
நன்றி: டாக்டர்  குமரேசன்

2 கருத்துகள்:

  1. ///வைட்டமின் ஏ, சி, இ அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமா சேர்த்துக்கிறவங்களை///

    என்னென்ன காய்கறிகள் அப்ப்டிங்கரதையும் சொல்லி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கு நன்றி ! அது பற்றி தனி பதிவாகவே போட முயற்சிக்கிறேன் !

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...