சவூதிவாழ் வெளிநாட்டவர்களுக்காக!!!
சவூதி அரசு நிடாகத் என்ற வேலைவாய்ப்பை சமநிலைப்படுத்தும்
முயற்சியில் ஈடுபட்டு அதனை செயல்முறைப்படுத்த ஏற்பாடுகள் செய்து
கொண்டிருப்பதை ஊடகங்களில் கடந்த ஒரு மாதமாக படித்து வருகிறோம்.
இந்தவாரம் முதல் அதனை கணினிமயமாக்கியுள்ளார்கள், கீழேயுள்ள சுட்டியைத்தட்டினால் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிலைத் தெரியும். உங்களின் இக்காமா நம்பரைக் கொடுத்தவுடன் உங்கள் நிறுவனம் "சிகப்பு, மஞ்சள் & பச்சை" என்ற எந்த தரத்தில் உள்ளது என்பது உடன்
தெரியவரும்.
சிலரின் கருத்து இது வெளிநாட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறுகிறார்கள், காரணம் சிகப்பு நிறம் உள்ள நிறுவனங்களில் இருந்து எந்த ஒரு நிபந்தனையும் இன்றி வெளிநாட்டவர் வெளியேறி அவருக்கு ஏதுவான வேறு ஒரு நிறுவனத்தில் சேரலாம் என்று கூறுகிறார்கள். (அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால்தான் உண்மைநிலை என்னவென்று தெரியும்)
http://www.mol.gov.sa/Services/Inquiry/NonSaudiEmpInquiry.aspx?m=4
குறிப்பு : உங்களுக்கு அரபி தெரியாவிட்டால் கீழேயுள்ள சுட்டியை அழுத்தினால் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரும்.
http://translate.google.com/#ar|en|%D8%A7%D8%AD%D9%85%D8%B1%20
என்ன தான் கூறுகின்றது இந்த "நிடாகத்"?
ஒரு நிறுவனத்தின் மனிதவளங்களில் எத்தனை உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர் என்பதினைக் கணக்கில் கொண்டு மூன்று வகையாக "சிகப்பு, மஞ்சள் & பச்சை" என அந்நிறுவனங்களை பிரிக்கின்றனர்..
'சிகப்பு' என்பது அரசு கூறும் நெறிமுறைகளை கண்டுக்கொள்ளாத சவூதி மயமாக்கலில் பங்கேற்காத நிறுவனங்கள்.
'மஞ்சள்' என்பது அரசின் நெறிமுறைகளை நிறைவுச் செய்யாது பகுதி அளவு
பின்பற்றும் நிறுவனங்கள்.
'பச்சை' என்பது அரசின் நெறிமுறைகளை முறையாக பின்பற்றுபவர்கள்.
சவூதில் இப்போது நம்மவர்கள் (அவர்களின் பார்வையின் படி நாம்
மட்டுமல்ல... அரேபியர்கள் அல்லாத அனைவருமே அயல்நாட்டவர்கள்) பணிபுரியும் நிறுவனங்களின் வண்ணத்தினைப் பொறுத்தே சவூதியில் தொழிலாளிகளின் 'இகாமா' என்கின்ற "சவூதி வசிப்பிட சான்றுரிமை"யினை 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மீள்பதிவு செய்ய வரும்போது, அவர்கள் 6 ஆண்டுகளை கடந்தவராக இருப்பின், அதனை அங்கீகரிக்கவா அல்லது வேண்டாமா என முடிவு செய்வர். நம்மவர்கள் பணிபுரியும் நிறுவனம் "சிகப்பு" அந்தஸ்து பெற்றிருப்பின், மேற்கொண்டு சவூதியில் வசிக்க முடியாது. "மஞ்சள்"நிற அந்தஸ்து பெற்றிருப்பின், "நிடாகத்"தின்
விதிகளை நிறைவுச் செய்யும் வரை "சவூதி வசிப்பிடச் சான்றுரிமை"யினை அயலகத் தொழிலாளர்களுக்கு வழங்காது. "பச்சை" நிற அந்தஸ்து கொண்டவர்களுக்கு எவ்வித சிக்கலுமில்லை.
இது தவிர, அரசின் பரிந்துரைகளுக்கும் அதிகமாக தன் நாட்டு மக்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு "பிளாட்டினம்" அந்தஸ்தினை உருவாக்கி பல சலுகைகளை வழங்குகின்றது. இத் திட்டம் குறித்து எழும் ஐயங்களுக்கு விளக்கமளிக்க தொழிலாளர் அமைச்சகம் தயாராக உள்ளது.
'இகாமா' மீள்பதிவு இல்லையெனில் இங்கு சவூதியில் மேற்கொண்டு வசிக்க இயலாது என்பது மட்டுமல்ல மீறி நாம் இருப்பின் சிறைச்சாலை உறுதி
தான். 'இகாமா'வினை மையமாகக் கொண்டு தான் வங்கி கணக்கு, மருத்துவம், காப்பீடு என அனைத்தையும் செயற்படுத்த இயலும்.
இந்த "நிடாகத்" திட்டம், "சிகப்பு மற்றும் மஞ்சள்" நிற அந்தஸ்து கொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவ்ர்களுக்கே சிக்கல். இருப்பினும் இதில் ஒரு மகிழ்வுக்குரிய செய்தி என்னவெனில், "சிகப்பு அல்லது மஞ்சள்" நிற
அந்தஸ்து நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் "பச்சை" நிற அந்தஸ்துக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டினால், முன்னாள் நிறுவனத்தின் "பணிக்கான தடையில்லாச் சான்றிதழ்" NOC (No Object Certificate) இன்றியே நேரடியாக அந்நிறுவனத்தில் சேர இயலும். இது வளைகுடாவிலேயே பணி புரிய விழைபவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வாய்ப்பு.
ஈமெய்லின் மூலம் பெறப்பட்டச் செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக