திங்கள், 13 ஜூன், 2011

அந்த இருவர்!

பனீ இஸ்ரவேலர்களில் இருவர் மார்க்க சகோதரர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் பாவம் செய்பவராக இருந்தார். மற்றொருவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபாட்டுடன் இருந்தார்.  வணக்கத்தில் ஈடுபட்டு வந்த நபர்,  பாவத்தைச் செய்யும் நபரைக் குறைக் கண்டவராக  இருந்தார்.  அவரிடம், "பாவத்தை விட்டு வீடு" என்று அறிவுரை கூறினார்.  "என்னை வீடு! என் இறைவன் என்னை மன்னித்து விடுவான்! எனக்கு பாதுகாவலனாக நீ அனுப்பபட்டுள்ளாயா? என அந்த பாவம் செய்பவர் கூறினார்.  அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்.  உன்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யமாட்டான்" என்று வணக்கசாலி கூறினார். அந்த இருவரும் மரணித்தனர்.  அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டனர்.  அப்போது வணக்கசாலியிடம், " நீ என்னை அறிந்தவனா? அல்லது நீ எனக்கு பொறுப்புதாரியா?" என்று அல்லாஹ் கேட்டான்.  பாவம் செய்தவரிடமோ, நீ என் அருளினால் சொர்க்கம் செல்! என்று கூறிவிட்டு,  வணக்கசாலியை நரகத்திற்கு  கொண்டுச்செல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: அபூதாவூத்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...