வியாழன், 20 அக்டோபர், 2011

நபிவழியில் நம் ஹஜ் - (தொகுப்பு - 1)

ஹஜ் செய்யும் முறை

ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினார்கள். இந்த ஹஜ்ஜைப் பற்றிய முழு விளக்கம்...
ஹஜ்ஜின் வகைகள் மூன்று

1. ஹஜ்ஜுத் தமத்துஃ

2. ஹஜ்ஜுல் கிரான்

3. ஹஜ்ஜுல் இஃப்ராத்

ஹஜ்ஜுத் தமத்துஃ

ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்) ஹஜ்ஜிற்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜிற்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை தன்னுடன் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜு தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால், ஹஜ்ஜிற்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும். துல்ஹஜ் 8ம் நாள் காலையில் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜிற்கு நிய்யத் (லப்பைக்க அல்லாஹும்ம ஹஜ்ஜன் என்று) வைத்துக் கொண்டு மினாவிற்குச் செல்ல வேண்டும்.

ஹஜ்ஜுல் கிரான்

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜிற்கும் உம்ராவிற்கும் சேர்த்து ஒரே நிய்யத்து (லப்பைக்க அல்லாஹும்ம ஹஜ்ஜன் வஉம்றதன் என்று) வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை கொண்டு செல்கின்றார்களோ, அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்தார்கள்.

ஹஜ்ஜுல் இஃப்ராத்

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜிற்கு மட்டும் நிய்யத்து (லப்பைக்க அல்லாஹும்ம ஹஜ்ஜன் என்று) வைப்பது, யார் ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் முறையில் ஹஜ் செய்கின்றார்களோ, அவர்கள் மக்கா வந்ததும் தவாஃப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். இவ்விரு வகையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்தால் 10ம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் 10ம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும். இவர்கள் துல் ஹஜ் மாதத்தின் 8ம் நாள் வரை மக்காவிலே தங்கியிருப்பார்கள். துல் ஹஜ் பிறை 8ம் நாள் காலை மினாவிற்குச் செல்ல வேண்டும். இவ்விரு வகையிலும் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள், துல் ஹஜ் மாதம் 10ம் நாள் ஜம்ரத்துல் அகபாவிற்கு கல்லெறிந்து, முடி எடுக்கும் வரை, இஹ்ராம் ஆடையை கழற்றாமல், இஹ்ராத்தில் தவிர்க்கப்பட வேண்டியவைகளை, பேணி நடக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்... இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...

நன்றி: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ

2 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே..

  இன்றுதான் தங்கள் தளத்திற்க்கு என் முதல் வருகை தங்கள் பதிவுகள் அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டியவை..

  அருமையான தளம் இன்று முதல் இணைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

  தங்கள் இறைப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  நன்றியுடன்
  சம்பத்குமார்

  பதிலளிநீக்கு
 2. வாருங்கள் சகோ.சம்பத்குமார் அவர்களே... உங்கள் வருகை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது !

  தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நண்றி !

  பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...