வெள்ளி, 28 அக்டோபர், 2011

நபிவழியில் நம் ஹஜ் (தொகுப்பு - 3)

கடந்த பதிவின் தொடர்ச்சி...
 
மினா செல்லல்:
 
தமத்துஃ ஹஜ் செய்பவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் சுப்ஹுவுக்குப் பின் “லப்பைக்க பி ஹஜ்ஜின்” என்ற நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து இப்ராத், இக்ரான் ஹாஜிகளுடன் தல்பியா ஓதிக் கொண்டு மினாவிற்குச் செல்ல வேண்டும். மக்காவிலிருந்து மினா செல்ல செளதி அரசு ஒன்பது பாதைகளை செம்மை செய்துள்ளன. கால் நடையாகச் செல்பவர்கள் ஸயீ உடைய வாசலின் வெளியே வந்ததும் ஆரம்பமாகும் இரு மலைக்குகை பாதைகளில் நடந்தால் 4 கி.மீ, முதல் 5 கி.மீ தூரத்தில் மினா அடையலாம். மற்ற பாதைகள் வாகனங்களில் செல்ல 8 முதல் 12 கி.மீ. தூரமுள்ளவை .

மினா சென்றடைந்ததும் தங்கி லுஹர், அஸர், மஃரிப், இஷா தொழுகைகளை தொழ வேண்டும். லுஹர், அஸர், அஷா தொழுகைகளைக் கஸராகத் தொழ வேண்டும். பள்ளியிலோ, தங்கியிருக்கும் கூடாரங்களிலோ தொழலாம். திக்ரு, துஆ, குர்ஆன் ஓதுதல், நல்ல இறையச்ச பயான்களை பேசுதல், கேட்டல் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

அரபா செல்லல்: துல்ஹஜ் ஒன்பதாம் நாள் சுப்ஹு தொழுது சூரியன் உதயமானதும் அரபாவை நோக்கி மிக அமைதியாக தல்பியாவை ஒதிக்கொண்டு எவருக்கும் தொல்லைகள் கொடுக்காமல் நடங்கள். அரபா எல்லையை அடைந்ததும் கிப்லாவை நோக்கி திரும்பி கைகளை உயர்த்தி நமக்குத் தெரிந்த துஆக்களை, தேவைகளை அல்லாஹ்விடம் மனம் உருகிக் கேட்கவும்.

அரபாவில் லுஹரையும், அஸரையும் லுஹருடைய நேரத்தில் கஸர்-ஜம் ஆக இரண்டிரண்டு ரக்அத்துக்கள் இரு இகாமத்துடன் தொழ வேண்டும். அஸருடைய நேரத்தில் அரபாத் எல்லைக்குள் நின்று மனமுருகி அல்லாஹ்விடம் நமது தேவைகளைக் கூறி அழுது சூரிய அஸ்தமனம் வரை பிரார்த்தியுங்கள், “அரபாவில் இருப்பதே ஹஜ்” என்ற நபிமொழிக்கொப்ப நமது ஹஜ் பரிபூரணமாக அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட இறைஞ்ச வேண்டும்.

பத்தாம் நாள் காலை சுப்ஹு தொழுகைக்குப் பின் கிப்லாவை முன்னோக்கி கை உயர்த்தி அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். நமது தேவைகளைக் கேட்க வேண்டும். இது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும். பின் ஏழு பொடி (சுண்டல் கடலை அளவு) கற்களைப் பொறுக்கிக் கொண்டு தக்பீர் கூறிய வண்ணம் மினா திரும்ப வேண்டும்.

மினா வந்தடைந்ததும் கீழ்க்காணும் கிரியைகளை நிறைவேற்றவும்:

1. பெரிய ஜமாரத்திற்கு (பெரிய ஷைத்தான்) சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறிய வண்ணம் எறிய வேண்டும்.

2. குர்பானி கடமையானவர்கள் தலைக்கு ஒரு ஆடு அல்லது எழு பேருக்கு ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாடு குர்பானி கொடுக்க வேண்டும். தமத்துஃ, இக்ரான் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கக் கடமையானவர்கள். இப்ராத் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கக் கடமையானவர்கள். இப்ராத் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கலாம், அல்லது ஹஜ்ஜுடைய காலங்களில் மூன்று நோன்பும் ஊர் திரும்பியதும் ஏழு நோன்புமாக 10 நோன்புகள் வைக்க வேண்டும். (அல்குர்ஆன் 2: 196)

3. தலைமுடியை குறைக்க|வெட்ட வேண்டும். முழுமையாக வழிப்பது சாலச் சிறந்தது. பெண்கள் விரல் நுனியளவு முடியை கத்தரித்து விட வேண்டும்.

இவைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வது சிறப்பு. முன்பின் மாற்றிச் செய்வதால் குற்றமில்லை. பெரிய ஜுமராத்தில் கல் எறிவது, தலைமுடி இறக்கலைக் கொண்டு ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடலாம். இதுவரை இஹ்ராமில் விலக்கப்பட்ட அனைத்தும் (உடல் உறவைத் தவிர) ஆகுமானதாகி விடும். குர்பானி துல்ஹஜ் 11, 12 நாட்களிலும் கொடுக்கலாம்.

பின் மக்கா சென்று ஹஜ்ஜுடைய தவாப் (ஏழுமுறை) சுற்ற வேண்டும். தமத்து ஹஜ் செய்பவர்கள் ஸயீ (தொங்கோட்டம்) ஓட வேண்டும். இப்ராத், இக்ரான் ஹஜ் செய்பவர்கள் ஹஜ் தவாப்புடன், முதலில் ஸயீ இஹ்ராமிலிருந்து பூரணமாக விடுபட்டு உடல் உறவு கொள்வது ஹலாலாகி விடும்.

ஷைத்தானுக்கு கல்லெறிதல் :

துல்ஹஜ் பத்தாம் நாள் முஸ்தலிபாவிலிருந்து திரும்பியது (சுப்ஹு) முதல் மஃரிப் வரை பெரிய ஜுமராத்திற்கு மட்டும் ஏழு கற்களை தக்பீர் கூறி எறிய வேண்டும்.

துல்ஹஜ் 11, 12, 13 நாட்களில் லுஹர் பாங்கு சொன்னபின் தான் கல்லெறிய வேண்டும். சின்ன,நடு, பெரிய ஜுமராத் என வரிசையாக ஏழு கற்களை தக்பீர் கூறிய வணண்ம் எறிய வேண்டும். இதற்கான கற்களை எங்கு வேண்டுமானாலும் பொறுக்கிக் கொள்ளலாம் (முஸ்தலிபாவிலிருந்து தான் கொண்டு வரவேண்டுமென்ற கட்டாயமில்லை) . துல்ஹஜ் 11, 12 நாள் சூரிய அஸ்தமன (மஃரிபுக்கு)த்திற்கு முன் மினா எல்லையைக் கடக்கவில்லையெனில் 13ம்நாளும் தங்கி லுஹருக்குப் பின் மூன்று ஜுமராத்திற்கும் கல்லெறிந்தே திரும்ப வேண்டும்.

ஜாக்கிரதை :
 
ஹாஜிகளில் அதிகமானவர்களுக்கு மரணம் சம்பவிக்கும் இடம் இந்த ஜுமராத் இடம் தான், கூட்ட நெரிசரில் கீழே விழுந்து மற்றவர்களின் மிதியால் மரணிப்பவர்கள் அதிகம். எனவே ஜாக்கிரதையாக சென்று வரவேண்டும்.

நோயாளிகள், வயதானவர்களுக்குப் பகரமாக மற்றவர்கள் தங்களுக்கான கல்லை எறிந்தபின் ஒவ்வொரு ஜுமராத்திற்லும் கல் எறியலாம், இவ்விதம் 11,12,13 நாட்களில் கல்லெறிந்து விட்டு மக்கா திரும்புங்கள் ஊர் திரும்புகையில் “விடைபெறும் தவாப்” (தவாபுல்விதாஃ) செய்து புறப்படுங்கள். இத்துடன் ஹஜ் முடிவடைகிறது.

ஜியாரத் :

மதீனா செல்வதும், மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) அவர்களது கப்ரை ஜியாரத் செய்வதும் ஹஜ் கடமைகளில் உள்ளதல்ல. “பள்ளிகளில் சிறந்தது மூன்று: 1. மக்காவில் கஃபத்துல்லாஹ் 2. மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி 3. தாருஸ்ஸலாமில் மஸ்ஜிதுல் அக்ஸா. இவைகளில் தொழுவது சாலச் சிறந்தது” என்ற நபிமொழிக்கொப்ப மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) காட்டிய வழியில் கப்ரு ஜியாரத் செய்வதும் சுன்னத்தாகும்.

இச்சுன்னத்துக்களை நிறைவேற்ற எப்போது வேண்டுமானாலும், எந்த உடையிலும் செல்லலாம். இஹ்ராம் , தல்பியா போன்றவை இல்லை. அதிகமாக செலவு செய்து பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அன்னிய நாட்டினராக வந்துள்ள ஹாஜிகள் இச்சுன்னத்துக்களை செய்து வருவது சிறப்புக்குரியதாகும்.

மஸ்ஜிதுன்னபவியில் நுழைந்ததும் தஹிய்யத்துல் மஸ்ஜிது இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். பர்லான தொழுகை நேரமாயின் முதலில் அதனை முடிக்க வேண்டும். ரவ்ளாவில் (நபி(ஸல்) கபுருக்கும், அவர்களின் மிம்பருக்குமிடையிலுள்ள பகுதி) தொழுதல் சாலச் சிறப்பு அங்கு தொழ முடியவில்லையெனில் பள்ளியின் எந்தப் பகுதியிலும் தொழலாம்.

மேற்கூறிய தொழுகையை முடித்து நபி(ஸல்) கபுருக்குச் சென்று மரியாதையுடன் மெதுவாக ஸலாம் கூறி, அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். பின் வலது புறம் சிறிது நகர்ந்து அபூபக்கர்(ரழி) அவர்களுக்கும், அடுத்து சிறிது நகர்ந்து உமர்(ரழி) அவர்களுக்கும் முறையே ஸலாம் கூறி அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.

அக்கபுருகளைச் சுற்றியுள்ள கம்பிகளைப் பிடித்து அழுவதோ, தொட்டு முத்தமிடுவதோ தடவி உடலில் தடவிக்கொள்வதோ வெறுக்கத்தக்கது. கண்டிக்கத்தக்கது, நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாறுபட்டது. இவ்விதம் செய்வோரை அக் கபுரைச் சுற்றியுள்ள காவலாளிகள் தடுப்பதையும்; சில நேரங்களில் குச்சியால் அடிப்பதையும் காணலாம்.

அடுத்து “ஜன்னத்துல் பகீஃ” மய்யவாடிக்கும், உஹது ஷிஹதாக்கள் அடங்கிய மய்யவாடிக்கும் சென்று ஜியாரத் செய்து ஸலாம் கூறி, அவர்களுக்காக அல்லாஹுவிடம் துஆச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் நம்மனைவரின் ஹஜ்ஜையும், அவன் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளும்படியான நபி(ஸல்) அவர்களின் வழியில் ஆக்கி வைப்பானாக! உங்களது எல்லா துஆக்களிலும் தெளஹீதைப் பரப்பும் எழை ஏடான அந்நஜாத்தை மறந்து விடாதீர்கள்.

முற்றும்...

நன்றி:  அந்நஜாத்: ஜுலை, 1987 – துல்காஃதா, 1407

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...