21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது? மூஸா நபியின் சமுதாயம். (2:56)
22. இந்த உலகிலேயே மரணித்த பின் உயிர்ப்பிக்கப்பட்ட சமுதாயம் எது? மூஸா நபியின் சமுதாயம். (2:56)
23. மூஸா நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் எந்த உணவை இறக்கி வைத்தான்? மன்னு, ஸல்வா (2:57) (20:80)
24. மூஸா நபி பாறையின் மீது அடித்த போது எத்தனை ஊற்றுகள் பீறிட்டு வந்தன? பன்னிரண்டு ஊற்றுக்கள் (2:60)
25. மூஸா நபிக்கு அல்லாஹ் வழங்கிய ஒன்பது அத்தாட்சிகள் என்ன? என்ன?
1. பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் (2:60)
2. கன மழை (7:133)
3. வெட்டுக்கிளி (7:133)
4. பேன் (7:133)
5. தவளைகள் (7:133)
6. இரத்தம் (7:133)
7. கைத்தடி பாம்பாக மாறியது (20:20)
8. மூஸா நபியின் கை ஒளிமிக்க வெண்மையாய் மாறியது (20:22)
9. கடல் பிளந்தது (26:63-67)
26. மூஸா நபியின் சமுதாயத்தினர் அவரிடம் ஒரே உணவை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறி வேறு எந்த உணவுகளைக் கேட்டனர்? பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் (2:61)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக