திங்கள், 17 அக்டோபர், 2011

குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் (Vaccination) தத்துவம் என்ன?

வரும் முன்னர் காப்பது தான் தடுப்பூசிகளின் வேலை. இது எவ்வாறு சாத்தியமாகும்? வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது போல.... எந்த நோயிலிருந்து குழந்தை பாதுகாக்கப்பட வேண்டுமோ... அந்த நோய்க்கிருமிகளை எதிர்க்கக் கூடிய எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதுதான் தடுப்பூசியின் தத்துவம்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நாம் அறிந்ததே. நாம் பெற்றெடுத்த செல்வங்களுக்கு நோயற்ற வாழ்வை உருவாக்கித் தருவதும் பெற்றோர்களின் கடமை. இன்றைய கால கட்டடங்கள் தடுப்பூசிகளின் காலகட்டம் என்றால் மிகையல்ல. விதவிதமான, வாய்க்குள் நுழையாத பெயர்களில் நோய்கள் தாக்கக் கூடிய சூழலில்தான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஆனால், மருத்துவத் துறையின் மகத்தான ஆராய்ச்சிகளின் விளைவாக, பெரும்பாலான கடும்நோய்கள், பிறந்த குழந்தைகளைப் பாதித்து விடாமல் பாதுகாப்பதற்காக பல்வேறு வகையான தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மனித வரலாற்றில், தடுப்பூசிகளின் மருத்துவ வெற்றியினால் உலகளாவிய அளவில் கோடிக்கணக்கான நோய்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன்... ஆயுளும் காக்கப்பட்டிருக்கின்றது.

குழந்தைகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளினால் ஏராளமான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படக் கூடிய பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

தடுப்பூசிகளின் அறிமுகத்தால் மூளைக் காய்ச்சல், போலியோ, காசநோய், அம்மை நோய்கள் போன்ற பல நோய்களின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இத்தகைய தடுப்பூசிகளின் அறிமுகத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டும் இறந்தும் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு, அந்தந்தக் காலகட்டங்களில் மருத்துவரின் ஆலோசனைப்படி, தடுப்பூசி-களைப் போட்டு விடுவதன் மூலம்.. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கடும் நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். தடுப்பூசிகளைத் தவிர்த்து விடுவதோ...தள்ளிப் போடுவதோ... குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். 

தடுப்பூசிகள்.. அந்தந்த தேசத்திற்கு ஏற்ற வகையில் இருக்கக் கூடும். ஒரு தேசத்தில் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு நோய்... உலகில், வேறு எங்காவது இருக்கக் கூடும். அகில உலகப் பயணங்கள் அதிகமாகி வருகின்ற இன்றைய காலகட்டத்தில் சில அரிய நோய்களுக்குமான தடுப்பூசிகளும் அவசியமாகிப் போய் விடுகிறது.

தடுப்பூசியை குழந்தைகளுக்கு உரிய காலகட்டத்தில் போட்டு விடுவதன் மூலம்... குழந்தைக்கும் பாதுகாப்பு... சுற்றியுள்ளோர்களுக்கும் பாதுகாப்பு.

உலகெங்கிலும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கட்டாயப்படுத்தப்-படுகின்றன. இந்திய அளவிலும் குறித்த கால கட்டங்களில் குறித்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் கடும் நோய் பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருவதால், வலியுறுத்தப்படுகின்றது.

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக வரும் ஆறு பெரும் நோய்களை VIP (VACCINE PREVENTABLE DISEASES) நோய்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். VIP என்றவுடன் முக்கியஸ்தர்களுக்கு வரும் நோய் என்று தவறாகக் கருதப்பட வேண்டாம். தடுப்பூசிகளினால் தடுக்கப்படக் கூடிய நோய்கள் என்று பொருள்.

அந்த முக்கிய ஆறு நோய்கள்:

1. டியூபர்குலோசிஸ் (TUBERCULOSIS)
 2. போலியோ (POLIOMYELITIS)
 3. மீஸில்ஸ் (MEASLES)
 4. டெட்டனஸ் (TETANUS)
 5. டிதீப்ரியா (DIPHTHERIA)
 6. பெர்டூசஸிஸ் (PERTUSSIS)

இக்கொடிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை மருத்துவ விஞ்ஞானம் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாக்கப்பட்டும் உள்ளன.
  
தடுப்பு மருந்து (VACCINE)களின் வழியாக,மிகக் குறைந்த அளவில் குறிப்பிட்ட நோய்க்கான கிருமிகள் உட்செலுத்தப்படுவதன் மூலம்.. உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்ட, குறிப்பிட்ட கிருமியை அழிக்கக்கூடிய எதிர்ப்பு சக்தியை (ANTIBODIES) உடல் உண்டாக்கி விடுகிறது. இதன் பிறகு இந்த நோய்க் கிருமி உள்ளே வந்தால் உடனே இந்த எதிர்ப்பு சக்தி அதனை அழித்து விடுகிறது. இதுதான் தடுப்பூசித் தத்துவம்.

‘‘தடுப்பூசி வழியாக உட்செலுத்தப்படும் நோய்க் கிருமி உயிருடன் ஆனால் பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் அல்லது செயலிழக்கச் செய்யப்-பட்டிருக்கும்’’ என்கிறது வாக்சின் பற்றிய அமெரிக்க அரசாங்கக் கையேடு. குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியின் எண்ணிக்கை அது உயிருடனானதா அல்லது செயலிழக்கப்பட்டதா என்பதைப் பொறுத்தே இருக்குமாம். உயிருள்ள கிருமிகளைக் கொண்ட தடுப்பு மருந்துகள் ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டாலே வாழ்நாள் பாதுகாப்பு கிடைக்குமாம். செயலிழக்கச் செய்யப்பட்ட கிருமிகளைக் கொண்ட தடுப்பு மருந்துகள் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தடவைகள் போடப்பட வேண்டியிருக்குமாம்.

இந்திய அளவில் குழந்தைகளுக்கு, 6-7 கடும் வியாதிகளுக்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகள் எந்தெந்தக் காலகட்டங்களில் குழந்தைகளுக்குப் போடப்பட வேண்டும் என்கிற அட்டவணை குழந்தை மருத்துவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு... அதன்படி முறையாகக் குழந்தைகளுக்குப் போட வேண்டும்.

இத்தகைய தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதில் பெற்றோர்களுக்கு சொல்ல-வொண்ணா தயக்கமும், பயமும் இருக்கிறது. போதாக் குறைக்கு அக்கம் பக்கத்தவர்களும்... தடுப்பூசிகளைப் பற்றி பூதாகாரமாக எடுத்துச் சொல்லி மேலும் பயமுறுத்தி விடுவார்கள். பெற்றோர்கள்.. தங்கள் குழந்தையின் நோயற்ற வாழவொன்றே குறியாகக் கொண்டு சிறந்த குழந்தை மருத்துவரை அணுகி,அவருடைய ஆலோசனை ஒன்றை மட்டுமே பின்பற்றுவது நல்லது.

இத்தகைய தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்கு போட்டவுடன்,பின் விளைவுகள் ஏற்படுமா.. ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? என்பதும் பெற்றோர்களின் கவலைகளை அதிகரிக்கச் செய்கிறது.

மருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக சமீபகாலங்களாகக் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளினால் அதிக பின்விளைவுகள் ஏற்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே ஏற்பட்டாலும் அவை மிகக் குறுகிய கால வேதனைதான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை தடுப்பூசி போட்டவுடனேயே... மருத்துவரிடம் பின்விளைவு பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு... அதன்படி குழந்தையைக் கையாள வேண்டும்.

தடுப்பூசிகளைப் பற்றியும் அதனைப் போடுவது பற்றியும் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி... தலை சிறந்த குழந்தை மருத்துவர் அஷுதோஷ் ஜிந்தல், M.D. PEDIATRICS) விளக்கம் தருகிறார் 

1. குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் தடுப்பூசி போடக் கூடாது. குழந்தைக்கு சாதாரண ஜலதோஷம், இருமல், லேசான ஜுரம், வாந்தி என்றால் தடுப்பூசியைத் தள்ளிப்போட வேண்டியதில்லை. குழந்தையின் உடல் நிலையை மருத்துவரே தீர்மானிக்கட்டும்.

2. குழந்தை பலவீனமாக உள்ளது. அதனால் தடுப்பூசியைத் தள்ளிப் போட வேண்டும். தவறான கருத்து.பலவீனமான குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.இதன் காரணமாகவே நோய் தொற்றுதலும் சுலபமானதாகிவிடும். எனவே, குறித்த காலத்தில் இத்தகைய குழந்தை-களுக்கு தடுப்பூசி போடுவது மிக அவசியம்.

3. குறித்த காலத்தில் தடுப்பு மருந்து கொடுக்கப்படவில்லையென்றால் பின் எப்போதும் கொடுக்க முடியாது. ஏதோ சில காரணங்களால் குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படவில்லையென்றால்,அதற்கு அர்த்தம் அவை எப்போதுமே போடப்பட முடியாது என்பது அல்ல. குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் படி...சற்று தாமதமாகவும் போட்டு விடலாம். குழந்தைக்கு இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், DPT எனப்படும் தடுப்பூசிக்கு பதில் DT எனும் தடுப்பூசி போடலாமாம்.

4. தடுப்பூசிகளின் பின்விளைவு கடுமையாக இருக்கிறது. அதனால் குழந்தைக்கு தடுப்பூசியே வேண்டாம். முற்றிலும் ஆபத்தான எண்ணம். தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவு... மிக மிக... மென்மையானதும்.. தற்காலிகமானதும்... அப்படியே இருந்தாலும் கூட எளிய மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும்.இதற்குப் பயந்து குழந்தைக்கு தடுப்பூசியே வேண்டாம் என்று தீர்மானிப்பது - அதன் ஆயுளுக்கே விபரீதமாகி விடக் கூடியது என்பதில் சந்தேகமே வேண்டாம்.
   
 5. தடுப்பூசிகளைப் போட்ட பிறகும் நோய் பாதிப்பதாகக் கேள்விப்படுகிறோம்.... இந்த நிலையில் தடுப்பூசி எதற்கு? போலியோ, காசநோய், அம்மை நோய்கள், தொற்று வியாதிகள் போன்ற பல கடும் நோய்கள் வாழ்நாள் முழுவதும் வராமலே இருக்கவும்... அவற்றால் குழந்தைகள் இறந்துவிடாமல் இருப்பதற்கும் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ள மகத்தான வெற்றிச் சாதனம் இந்தத் தடுப்பு மருந்துகள்.அநேகமாக அனைத்துத் தடுப்பு மருந்துகளுமே தரமானவை என்றாலும் கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபரீதங்கள் நடந்துதான் விடுகின்றன. இதற்காகத் தடுப்பூசியே தேவையில்லை என்று ஒரு குழந்தையின் பெற்றோர் முடிவெடுப்பது சரியில்லை.

குழந்தையின் நீண்ட கால ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் படி, குறித்த கால கட்டங்களில் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக் கொண்டு வருவதே... குழந்தைக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை. வீண் புரளிகளுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்காமல்,எத்தகைய சந்தேகங்களையும் நிபுணர்களிடம் நிவர்த்தி செய்து கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை ஏற்படுத்திக் கொடுங்கள்!
(நன்றி: டாக்டர் அஷுதோஷ் ஜிந்தல், M.D. PEDIATRICS) 

2 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் !
    நன்றி தோழரே !

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள பதிவு, அனைவருக்கும் தேவையான தகவல்கள்.....

    நன்றி நன்றி.....

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...