திங்கள், 16 மே, 2011

பெண்களே! தசை தளர்வு ஏற்படாமல் இருக்க தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும்!

தசை தளர்வு ஏற்படாமல் இருக்க பெண்கள் தினமும் 2 (இரண்டு) டம்ளர் பால் குடிக்க வேண்டும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பால் குடிப்பது உடல் நலத்துக்கு சிறந்தது என அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் பால் குடித்தால் உடல் தசையில் தளர்வு ஏற்படாது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தினசரி 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் அவர்களின் உடல் தசைகளில் தளர்வு ஏற்படாமல் இறுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். பெண்கள் தினமும் குடிக்கும் 2 டம்ளர் பாலில் மிக அதிக அளவில் வைட்டமின் டி, மற்றும் கால்சியத்தின் அளவுகள் உள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாமல் சராசரி அளவிலேயே இருக்க செய்யும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 40 முதல் 65 வயது வரையுள்ள 300 பேரிடம் 2 ஆண்டுகளாக நடத்திய ஆய்வுக்கு பிறகு இந்த விவரம் தெரிய வந்துள்ளது.பால் பொருட்கள் மட்டுமின்றி வைட்டமின் டி சத்து உள்ள மற்ற பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டாலும் தசை தளர்வு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்று இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஈ-மெயில் மூலம் கிடைத்தச் செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...