வியாழன், 5 மே, 2011

ஆந்தைகளுக்கும் அழகு உண்டு!!!

ஆந்தை இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் காதுகளையும் சொண்டையும் மற்றும் facial disk என அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.   

ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் அவற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும் அவற்றின் பார்வை விஷேசமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial disk கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன. ஆந்தைகளின் வலுவான நகங்களும் கூரிய சொண்டும் உண்பதற்கு முன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும் மங்கலான இறகுகளும் அவை சத்தமின்றியும் காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் செமிக்கப்பட முடியாத எலும்புகள் செதில்கள் மற்றும் இறகுகள் போன்றவற்றை உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது.
 
எது எவ்வாறு இருப்பினும் ஆந்தைகளுக்கும் அழகு உண்டு. 
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...