சனி, 21 மே, 2011

குஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன் - யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களைச் சேர்ந்த குஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன் ஆகிய மூவரையும் அல்லாஹ் சோதிக்க் நாடி அவர்களிடத்தில் ஒரு வானவரை அனுப்பிவைத்தான்.அவ்வானவர் குஷ்டரோகியிடம் வந்து, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அதற்கு அந்த குஷ்டரோகி, " அழகான நிறமும், அழகான மேனியும் வேண்டும்" என்று கூறினான்.  உடனே (அவ்வானவர்) அவனைத் தடவி விட்டார். அவனது குறை அவனைவிட்டு போய்விட்டது. (பிறகு) "உனக்கு எந்த பொருள் விருப்பம்?" என்று கேட்டார். (அதற்கு அவன்) "ஒட்டகம்" என்றான்.  கற்பமுள்ள ஒட்டகம் வழங்கப்பட்டான். (அவ்வானவர்) "அல்லாஹ் உனக்கு அதில் பரக்கத் செய்வானாக" என்றார். 

பிறகு,வழுக்கைத்தலையனிடம் அவ்வானவர் வந்தார்.  "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்க, (அதற்கு அவன்), "அழகான முடி வேண்டும்" என்று கூறினான்.  உடனே (அவ்வானவர்) அவனைத் தடவி விட்டார். அவனது குறை அவனைவிட்டு போய்விட்டது. (பிறகு) "உனக்கு எந்த பொருள் விருப்பம்?" என்று கேட்டார். (அதற்கு அவன்), "பசுமாடு" என்றான். கற்பமுள்ள பசுமாடு வழங்கப்பட்டான். (அவ்வானவர்) "அல்லாஹ் உனக்கு அதில் பரக்கத் செய்வானாக" என்றார். 

பிறகு, குருடனிடம் வந்து, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்க, (அதற்கு அவன்), "எனக்கு பார்வை திரும்பத்தர வேண்டும். நான் மக்களைப் பார்க்க வேண்டும்" என்றான்.  உடனே (அவ்வானவர்) அவனைத் தடவி விட்டார். அவனது குறை அவனைவிட்டு போய்விட்டது. (பிறகு) "உனக்கு எந்த பொருள் விருப்பம்?" என்று கேட்டார். (அதற்கு அவன்), "ஆடு" என்றான். கூட்டிப்போடக்கூடிய ஆடு வழங்கப்பட்டன. 
 
அம்மூன்றும் குட்டிப்போட்டன.  முதலாவனுக்கு ஒரு பள்ளத்தாக்கு நிறைய ஒட்டகம் உருவாகிவிட்டன.  இரண்டாமாவனுக்கு ஒரு பள்ளத்தாக்கு நிறைய மாடுகள் உருவாகிவிட்டன. மூன்றாமாவனுக்கு  ஒரு பள்ளத்தாக்கு நிறைய ஆடுகள் உருவாகிவிட்டன.  பின்னர் அதே வானவர், தனது முந்தைய தோற்றத்திலும், அமைப்பிலும் குஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன்  ஆகிய மூவரிடமும் தனித்தனியாக வந்து,"நான் ஏழ்மையான மனிதன்,வழிப்போக்கன்.   என்னுடைய பிரயாணத்திற்குரியவை எல்லாம் இல்லாமல் போயிவிட்டன.  எனவே, இன்று அல்லாஹ்வின் உதவிக்கொண்டும், பின்னர் உன்னுடைய உதவிக்கொண்டும்தான் இன்றைக்கு எனக்குத் தேவையானது கிடைக்கும்" என்று கேட்டபோது, "எனக்கு அதிகமான தேவைகள் உள்ளன" என்று குஷ்டரோகி கூறினான்.  "உன்னை நான் நான்கு அறிவேன்.  மக்களெல்லாம் ஏழை என்றும், குஷ்டரோகி என்றும் உன்னை இழிவாக கருதவில்லையா?  அல்லாஹ் உனக்கு (நீ விரும்பியவற்றை) வழங்கினான்." என்று அந்த வானவர் அறிவுறுத்தினார்.  அதற்கு அவன், "(இந்த செல்வத்தை) தலைமுறை தலைமுறையாக நான் பெற்றுள்ளேன்" என்றான்.  உடனே அவ்வானவர், "நீ பொய்யனாக இருந்தால் அல்லாஹ் உன்னை பழைய நிலைக்கு மாற்றட்டும்" என்று கூறினார். 
 
பின்னர், தனது முந்தைய தோற்றத்திலும், அமைப்பிலும் வழுக்கைத்தலையனிடம் வந்து, "நான் ஏழ்மையான மனிதன், வழிப்போக்கன்.   என்னுடைய பிரயாணத்திற்குரியவை எல்லாம் இல்லாமல் போயிவிட்டன.  எனவே, இன்று அல்லாஹ்வின் உதவிக்கொண்டும், பின்னர் உன்னுடைய உதவிக்கொண்டும்தான் இன்றைக்கு எனக்குத் தேவையானது கிடைக்கும்"என்று கேட்டபோது, குஷ்டரோகி சொன்ன அதே பதிலை இவனும் சொன்னான்.  உடனே அவ்வானவர், "நீ பொய்யனாக இருந்தால் அல்லாஹ் உன்னை பழைய நிலைக்கு மாற்றட்டும்" என்று கூறினார். 
 
பின்னர்,  குருடனிடம் வந்தார். நான் ஏழ்மையான மனிதன்,வழிப்போக்கன்.   என்னுடைய பிரயாணத்திற்குரியவை எல்லாம் இல்லாமல் போயிவிட்டன.  எனவே, இன்று அல்லாஹ்வின் உதவிக்கொண்டும், பின்னர் உன்னுடைய உதவிக்கொண்டும்தான் இன்றைக்கு எனக்குத் தேவையானது கிடைக்கும்"  எனவே உனக்கு பார்வையைத் திருப்பித் தந்தானே அவனை முன்வைத்து உன்னிடம் ஓர் ஆட்டைக் கேட்கிறேன்.  அதன்மூலம் என் பயணத்தில் (என் தேவைகளை) நிறைவுசெய்துகொள்வேன்" என்றார்.  அதற்கு அக்குருடன், "நான் பார்வை இழந்தவனாக இருந்தேன்.  அல்லாஹ் எனக்குப் பார்வையைத் திருப்பித்தந்தான்.  எனவே நீர் விரும்பியதை எடுத்துக்கொள்வீராக! நீர் விரும்பாதவைகளை விட்டுவிடுவீராக!  அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்று அல்லாஹ்வுக்காக நீர் எதை எடுத்துக்கொண்டாலும் உம்மை நான் தடுக்கமாட்டேன்" என்றார். அதற்கு அவ்வானவர், " உன் செல்வத்தை நீயே வைத்துக்கொள். நீங்கள் மூவரும் சோதிக்கப்பட்டீர்கள்.  அல்லாஹ் உம்மைப் பொருந்திக்கொண்டான்.  உம் இருதொழக்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான்" என்றான்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...