வெள்ளி, 13 மே, 2011

தப்லீக் ஜமாஅத் - ஒரு பார்வை!!!

இந்தியாவின் வடபகுதியிலுள்ள தேவ்பந்த் எனும் ஊரிலுள்ள மேவாத எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் இல்யாஸ் காந்திஹ்லவி தேவ்பந்தி என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இந்த தப்லீக் அமைப்பின் கேந்திரஸ்தலம் இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. தேவ்பந்த் எனப்படுவது அங்குள்ள ஹனபி மத்ஹப் போதிக்கும் மத்ரஸாக்களில் மிகப் பழைமை மிக்கதும், பெரியதுமாகும். மத்ரஸத்து தாருல் உலூம் என்பது இதன் பெயராகும். முஹம்மத் காஸிம் நானூத்துவியின் மேற்பார்வையில் நபி (ஸல்) அவர்களே இதனை ஆரம்பித்ததாகவும்இந்த மத்ரஸாவுக்கு அடிக்கடி முஹம்மது நபியவர்கள் தமது கலீபாத் தோழர்களுடன் வருகை தந்து மத்ரஸாவின் வரவுசெலவுக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தப்லீக் முக்கியஸ்தர்கள் வாதிடுகின்றனர். ஆதாரம்: : (தோ ரூஹானிய்யத் அறபு பெயர்ப்பு ப:434)
இந்த மத்ரஸாவில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை விளக்கம் (அகீதா) இஸ்லாத்துக்குப் பல்வேறு கோணங்களில் முரண்படும் மாத்துர்திய்யா பிரிவினரின் கொள்கையின் படி போதிக்கப்படுகின்றது. மார்க்கச் சட்டங்கள் ஹனபி மத்ஹபின் ஊடாகக் கற்பிக்கப்படுகின்றன. இந்த மத்ஹபு நபிவழிக்கு மாற்றமான ஆயிரக் கணக்கான சட்டங்களைப் போதிக்கின்றதென்பது தனி வியம். அப்படியானால் அல்லாஹ் கூறிய கொள்கைக்கு மாற்றமான நம்பிக்கைகளும் நபியவர்களின் போதனைகளுக்கு மாற்றமான சட்டங்களும் போதிக்கப்படும் மத்ரஸா ஒன்றை எப்படி நபியவர்களே தொடங்கி வைக்க முடியும் ? அடிக்கடி வருகை தந்து கணக்குகளைச் சரிபார்க்க முடியும் ? அவர்களுக்கே வெளிச்சம் இப்படி நிகழ்வது சாத்தியமா ? என்பது தனி வியம்.
இது ஒருபக்கமிருக்க இந்த தப்லீக் பெரியார்கள் அனைவருமே ஜிஸ்த்திய்யா தரீக்காவின் ஷேக்மார்கள் தர்ம கர்த்தாக்களாவார்கள் என்பதுதான் ஆச்சரியமான வியம். இந்தத் தரீக்காவைத் சேர்ந்தவர்கள்; ஹாஜா முஈனுத்தீன் ஜிஸ்;தி அவர்களைத் தமது ஆத்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள்.
இவர்களிடம் ஜிஸ்திய்யா தரீக்காவின் ஷேக்மாரின் வரலாறுகள்எனும் பெயரில் ஒரு புத்தகம் உண்டு. இதில் அந்த தரீக்காவின் முக்கிய ஷேக்மார்களின் வாழ்க்கைத் தொகுப்பு உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதில் முதலாவது இடத்தில் நபி (ஸல்) அவர்களுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கின்றார்கள். என்னவோ நபியவர்களே ஜிஸ்த்திய்யாத் தரீக்காவை ஆரம்பித்து அதன் முதலாவது ஷேக்காக இருந்து நடத்தியது போன்ற ஒரு பிரமையைப் பாமரர்களுக்குப் போதிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்கள். அடுத்து வரும் ஜிஸ்த்தியாத் தரீக்காவின் ஷேக்மார்களாக அபூபக்ர் (ரலி), உமர், (ரலி) உதுமான் (ரலி) அலி (ரலி) அவர்களது பெயர்களை இடம்பெறச் செய்து இஸ்லாத்தின் வரலாறே ஜிஸ்திய்யா தரீக்காவிலிருந்தே தோற்றம்பெற்றது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.
அது மட்டுமின்றி நபியவர்கள் தமது மரணத்தில் கப்ருடைய வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். மரணித்தவர்கள் திரும்ப மறுமையில் தான் எழுப்பப்படுவார்கள் என்பது இஸ்லாமியப் போதனை. அவர்கள் சொர்க்கவாசிகளாயின் அங்குள்ள இன்பங்களைக் கண்ணுற்றதும் உலகிற்கு வரவே விரும்ப மாட்டார்கள். உயிர்த்தியாகம் செய்த ஷஹீத் மாத்திரம் மீண்டும் உலகுக்கு வந்து 10 தடவைகள் போரில் கொல்லப்பட வேண்டுமென விரும்புவார் என்பது நபிமொழி. (புகாரி 2606 முஸ்லிம் 34).
இதற்கு மாற்றமாக மரணத்தின் பின்னும் ஒருவர் உலகிக்கு மீண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்ய முடியுமென்ற வழிகெட்ட சூபிகள் கூறும் இந்துக் கொள்கையினையே இவர்கள் கொண்டிருக்கின்றனர் நபியவர்கள் தேவ்பந்து மத்ரஸாவின் கணக்கு வழக்குகளைச் சரிசெய்யத் தோழர்களுடன் அடிக்கடி வருவதாக இவர்கள் கூறுவதிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம். தப்லீக் ஜமாஅத் சூபித்துவம் பிரசவித்த குழந்தை என்பதற்கு இந்த ஓர் ஆதாரம் மாத்திரமே போதும்.
இல்யாஸ் மௌலானா அவர்களைப்பற்றிச் சொல்வதானால் இவர்கள் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள். சூபித்துவப் பாதையில் தன்னை முன்னர் ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மார்க்க அறிவில் போதிய தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. அதாவது அவர் சார்ந்திருந்த, சரிகண்டிருந்த சூபித்துவ தரீக்காவின் பக்கம் மக்களை ஒன்று சேர்ந்த்து நேர் வழிப்படுத்த வேண்டுமென்ற ஆதங்கத்துடன் இருந்தார்கள். றஸீத் அஹ்மத் கான்கோஹி, அஷரப் அலி தானவி போன்ற ஷேக்மார்களிடமும் பைஅத் குருஞான தீட்சை பெற்றுக் கொண்டவராயிருந்தார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8)
குருமார்களிடம் சென்று ஞான தீட்சை பைஅத் செய்வது இஸ்லாத்துக்கு முரணான வியமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது ஊரான மேவாத்தியிலுள்ள மக்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமான நிலையில் விக்ரக வழிபாடு நடத்தும் இந்துக்களின் கலாச்சாரத்தை முற்றிலும் தழுவிய நிலையிலேஎவ்வித வணக்க வழிபாடுகளோ இபாதத்களோ இன்றி வயலும் வாழ்வுமாக இருந்த அந்த அறியாமைக் கூட்டத்தைக் கண்டு இவர்களை நேர்வழிப்படுத்த எண்ணிய ஷேக் அவர்கள் தனது குருமார்களிடம் இது பற்றிப் பேசி தனது திட்டத்தைத் தெரிவித்த போது அவர்களும் அதற்குச் சம்மதிக்கவே இவர்கள் தமது இந்த அமைப்பைத் தொடங்கி தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கமென அதை அறிமுகப்படுத்தினார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8).
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய வியம் யாதெனில் ஷேக் அவர்களின் இஸ்லாமியப் பற்றும், மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்பட்ட சிரமங்கள் அனைத்தும் பாராட்டத்தக்கதே. ஆனால் அவர்கள் எதன் பக்கம் மக்களை அழைத்தார்கள் என்பதே கேள்வி ?. சூபித்துவத்தைப் பற்றியும் அதன் கொள்கைகள் கோற்பாடுகள் பற்றியும் ஏற்கனவே உங்களுக்குக் கூறியிருக்கின்றேன். அந்த தரீக்காக்களின்; பக்கம்தான் மக்களை அழைத்தார்கள். அதாவது அன்று அவர்களுக்குத் தெரிந்த இஸ்லாம் அதுதான். இதற்காக அவர்களைக் குறைகூறவும் முடியாது. காரணம் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இஸ்லாம், குர்ஆன் ஹதீஸின் விளக்கங்களெல்லாம் ஆலிம்களுக்குக் கூடத் தெரிந்திருக்காத காலமது. மத்ஹபு நூல்களை மார்க்க ஞானமெனவும்சூபித்துவக் கருத்துக்களை மெஞ்ஞானமெனவும் நம்பி பாமர முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம். குர்ஆன் ஹதீஸ் போதனைப்படிதான் மக்கள் வாழவேண்டுமென ஆங்காங்கே ஓரிரு உலமாக்கள் பிரச்சாரம் செய்தாலும் அவர்களெல்லாம் குழப்பவாதிகள்வஹாபிகள் என்று பட்டஞ் சூட்டப்பட்டு சமூகத்திலிருந்தே ஒதிக்கி வைக்கப்பட்ட காலம். எனவே ஷேக் இல்யாஸ் அவர்களிடமும் இஸ்லாத்தின் அகீதா அறிவுகள் அதன் தூய வடிவில் சென்றடையவில்லை. அவர்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரம் பற்றிய அவா ஓங்கியிருந்த போதும் கூட அதனைச் செயற்படுத்துவதற்காக அவர்கள் தெரிவுசெய்த வழிமுறை சூபித்துவ வழிமுறையாகவே இருந்தது. அவர்களும்கூட சூபித்துவ தரீக்காவின் ஷேக்மார்களிடம் குருதீட்சை பெற்றிருந்தார்கள்.. அவர்களுக்குப் பின் வந்த தப்லீக்கின் முக்கியஸ்த்தர்களும் அதே ஞான வழியில் நடை பயில்பவர்களாகவே இருந்தார்கள்.
எனவே சுருங்கக் சொல்வதானால் ஒரு இயக்கத்தின் ஸ்தாபகர் தன்னகத்தே கொண்டிருந்த நற்குணங்கள்பக்தி, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீதிருந்த ஈடுபாடு போன்வற்றைக் கொண்டு அவரது இயக்கத்திற்கும் நல்ல இயக்கம் என்று சான்றுவழங்கிட முடியாது. உதாரணமாக நூஹ் நபி லூத் நபி ஆகியோர் நல்லடியார்கள் என்றபடியால் அவர்களின் மனைவிமக்களும் நல்லவர்களென வாதிடுவது எப்படி அபத்தமானதோ அது போன்று தான் இதுவும். நபியவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய கூட்டமெனப் பிரகடனம் செய்த கவாரிஜ்களைப் பாருங்கள் ஸஹாபாக்களையே மிஞ்சி விடுமளவுக்கு அதிக இபாதத்தாளிகளாக இருந்தார்கள். குணசீலர்களாயிருந்தார்கள். இதை வைத்து அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிட முடியுமா ? எனவே ஒரு இயக்கத்தை இஸ்லாமிய இயக்கமென்று சொல்வதானால் அது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எந்தளவுக்கு ஒத்துப் போகின்றது, எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதை எடை போட்டுப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும்.

நன்றி: சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் (புத்தகம்)

1 கருத்து:

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...