ஞாயிறு, 9 அக்டோபர், 2011

40 வயதை அடைந்தவரா நீங்கள்? - இதைப் படிங்க!

வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள்.  ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.     

40 வயது ஆகின்றபோது எல்லாமே சரிவடையத் தொடங்குகின்றது என்பது தான் அவர்களின் கருத்தாகும்.

பிரிட்டனில்  நடத்தப்பட்ட புதிய ஆய்வொன்றின் பிரகாரம் 41 வயதில் தான் பிரிட்டிஷ் மக்கள்  எல்லா விடயத்திலும் கண்டபடி நடக்க ஆரம்பிக்கின்றனர். அளவுக்கு அதிகமாகச்  சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.

அதுவரை செய்துவந்த வழமையான  உடற்பயிற்சிகளில் அசிரத்தையுடன் நடந்து கொள்கின்றனர். 40 வயதுக்கு  மேற்பட்டவர்களுள் 40 வீதத்துக்கும் அதிகமானவர்கள் இனி என்ன நடந்தால் தான்  என்ன என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

இதனால் பல நோய்களுக்கான ஆபத்தை குறிப்பாக நீரிழிவு நோய் ஆபத்தை எதிர் நோக்குகின்றனர்.

நீரிழிவு  நோய் வாரத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு தான் இந்த ஆய்வு நடத்தப்ட்டுள்ளது.  இந்த ஆய்வின்போது கேள்விகளுக்கு பதில் அளித்த பலர் கடிகாரத்தை மீண்டும்  மறுபக்கம் திருப்ப முடியாதா என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

காலத்தைப்  பின்னோக்கி நகர்த்த முடியுமானால் தாங்கள் எடை கூடுவதையும் தவிர்த்துக்  கொள்ளலாம் என்று சிலர் வேடிக்கையாகவும் பதில் கூறியுள்ளனர்.

பிரிட்டனில்  வருடாந்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் நிலை நிரிழிவு நோய்  உள்ளவர்களாக இனம் காணப்படுகின்றனர். தினசரி 275 பேர் அல்லது ஐந்து  நிமிடத்துக்கு ஒருவர் என்ற ரீதியில் புதிய நீரிழிவு நோயாளர்கள் இனம்  காணப்படுகின்றனர்.

பிரிட்டிஷ் மக்களின் சுகாதாரத்துக்குப் பாரிய  அச்சுறுத்தலாக நீரிழிவு நோய் மாறியுள்ளது. இந்த ஆய்வில்  கலந்துகொண்டவர்களில் 42 வீதமானவர்களுக்கு இரண்டாம் நிலை நீரிழிவு என்றால்  என்னவென்றே தெரியாது.

நீரிழிவு நோய் ஏற்படுத்தக் கூடிய தாக்கம்  பற்றி இதில் பங்கேற்ற கால்வாசிப் பேருக்கு எதுவும் தெரியாது. அவர்கள்  இதனால் ஏற்படக் கூடிய ஏதாவது ஒரு தாக்கம் பற்றியேனும் அறிந்திருக்கவில்லை.

நீரிழிவு  நோயால் அங்கங்கள் துண்டிக்கப்படக் கூடும், இருதயக் கோளாறுகள் ஏற்படக்  கூடும், குருட்டுத் தன்மை ஏற்படக் கூடும் என எதையுமே இவர்கள் அறிந்திருக்க  வில்லை. லோயிட்ஸ் பார்மஸி நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இந்த நிறுவனம் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களையும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

நன்றி: லோயிட்ஸ் பார்மஸி நிறுவனம்

2 கருத்துகள்:

  1. padaiththa iraivan kooruvathai kelungal! 40 vayathai adanthaal thankkaagavum thanathu petrorukkaagavum than makkalukkaagavum manam thirunthi "dhu-aa" piraarthanai seykinraan. (paarkka aquraan 46:15)

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் !
    இவ்விடத்தில் இறைவசனத்தை சுட்டி காட்டியதற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...