74. மறுமை நாளில் அல்லாஹ் மூன்று வகை மனிதர்களிடம் தர்க்கம் செய்வேன் என்று கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த மூவர் யார்?
1.அல்லாஹ்வின் பெயரைக் கூறி உடன்படிக்கை செய்து பிறகு அதை முறித்தவன்.
2.சுதந்திரமான ஒரு மனிதனைக் கடத்திச் சென்று விற்று அந்த பணத்தில் சாப்பிட்டவன்.
3.ஒரு கூலி ஆளை வேலைக்கு அமர்த்தி முழு வேலையையும் வாங்கிவிட்டு அவனுடைய கூலியைக் கொடுக்காதவன்.
75. மூன்று வகையான மனிதர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசமாட்டான், அவர்களை பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த மூவர் யார்?
1.வனாந்திரத்தில் மிஞ்சிருக்கும் தண்ணீரை வழிப்போக்கர்கள் பயந்த்தவிடாமல் தடுப்பவன்.
2.அஸருக்கு பின் ஒருவருடன் வியாபாரம் செய்து அந்தப் பொருளை இன்ன விலைக்கு வாங்கினேன் என்று பொய் சத்தியம் செய்து அதை உண்மை என்று நம்ப வைத்தவன். ஆனால் அது உண்மையல்ல.
3.உலக லாபத்திற்காக ஆட்சி தலைவரிடம் பைஅத் செய்தவன். அவன் ஏதேனும் கொடுத்தால் அவனுக்கு நன்றி செலுத்துவான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம்).
76.அல்லாஹ் மறுமை நாளில் மூன்று மனிதர்களுடன் பேசவோ அவர்களை அருளுடன் பார்க்கவோ மாட்டான். அவர்களுக்கு நோவினைத்தரும் கடும் வேதனை உள்ளது. அந்த மூன்று வகை மனிதர்கள் யார்?
1.விபச்சாரம் செய்யும் கிழவன்.
2.பொய்யுரைக்கும் அரசன்.
3.பெருமையடிக்கும் ஏழை.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக