நம்மைச் சுற்றியிருப்பவர் புகைக்கும் சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதைக் குறிக்கும் 'பாசிவ் ஸ்மோகிங்' காரணமாக, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அதிக பாதிப்பு என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வீட்டில் கணவரும், வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களும் சிகரெட் பிடிக்கும் போது, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் கர்ப்பிணிப் பெண்களிடம் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், பாசிவ் ஸ்மோகிங் காரணமாக வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் உடல நல பாதிப்பு ௨௩ சதவீதம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பிரசவத்தின் போது பெரிய அளவில் சிக்கலைச் சந்திக்க நேரும் அபாயாமும் உண்டு என்கிறது அந்த ஆய்வு. குறிப்பாக, 'பாசிவ் ஸ்மோகிங்' வாயிலாக 10 சிகரெட்டின் புகையை நாள்தோறும் சுவாசிக்கும் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தின் தன்மை கூடுதலாக இருக்குமாம்.
அதேவேளையில், பிறக்கும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து உண்டா என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.
நன்றி: தமிழ்சோர்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக