16.ரமளான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு எந்த மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் (ஆஷுரா) நோன்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
17.கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை எது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இரவுத் தொழுகை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
18.பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்துக்கள் உண்டா? பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்துக்கள் இல்லை. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக