முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டாலும் அல்லது ஆரம்பிக்காவிட்டாலும் இது பொருந்தும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - “நீங்கள் பள்ளிவாசலில் நுழையும் போதெல்லாம் இரண்டு ரக்அத் தொழுவதற்கு முன் உட்காராதீர்கள்” ஆதாரம் : முஅத்தா.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, ஒரு மனிதர் பள்ளிவாசலில் வந்(து அமர்ந்)தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீ தொழுதாயா? என்று வினவிய போது போது அந்த மனிதர் ‘இல்லை’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் “எழுந்து இரண்டு ரக்அத் தொழுது கொள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஆதாரம் : புகாரி.
இன்று நமது வழக்கத்தில் காண்கிறோம், சிலர் பள்ளிவாசலுக்குள் வந்தவுடன் அது ஜூம்மா தொழுகைக்கான நேரமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற கடமையான தொழுகைக்கான நேரங்களாக இருந்தாலும் சரி, உடனே அமர்ந்து விடுவதைப் பார்க்கின்றோம். இத்தகைய சகோதரர்கள் மேற்கண்ட நபி (ஸல்) கட்டளையைக் கருத்தில் கொண்டு அதன்படி செயல்பட கடமைப்பட்டுள்ளார்கள். ஒருவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கட்டளைகளையும் உபதேசங்களையும் பின் பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் வழிகேட்டின் பக்கம் செல்லமாட்டார். எவர் ஒருவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட்டு மற்றவர்களின் போதனைகளை பின்பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் வழிகேட்டின் பக்கம் சென்றவராவார்.
யா அல்லாஹ் நீயே சிறந்த வழிகாட்டுபவன்; மேலும் அனைவருக்கும் வழிகாட்டுபவன் நீயே! எனவே யா அல்லாஹ் எங்களுக்கும் நேர்வழியைக் காட்டுவாயாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக