சனி, 26 பிப்ரவரி, 2011

உங்கள் பிள்ளைகளை ஆண்டுத்தேர்வுகளுக்கு தயார்படுத்த சில யோசனைகள்!!!

இனிதே வரவிருக்கின்றன  மாணவச் செல்வங்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள். நம் குழந்தைகள் சிறப்பான முறையில் வெற்றி பெற வேண்டுமெனில் குழந்தைகள் மட்டும் உழைத்தால் போதாது. அதற்காக பெற்றோர்களும் பொறுப்பை உணர்ந்தவர்களாக குழந்தைகளுக்கு உதவி புரிய வேண்டும். அதற்கான சில யோசனைகள்: 

         1    குழந்தைகளுக்கு ஆர்வத்தையும்,ஊக்கத்தையும் அதிகமதிகம் கற்பிக்க வேண்டும்.
 
2.   குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் மீது அச்சத்தையும், நம்பிக்கையையும் கற்பிக்க வேண்டும்.
3.   குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு இடங்களையும் சூழ்நிலையையும் அமைத்து தரவேண்டும்.
4.   குழந்தைகள் விளையாடவே போகக்கூடாது என்று கண்டிப்புடன் இல்லாமல் கட்டுப்பாடுடனும் சிறிய நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.
5.   படிப்பதற்கு தேவையான புத்தகங்கள்,நோட்டுகள், எழுதுகோள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை காலம் தாழ்த்தாமல் வாங்கிகொடுக்க வேண்டும்.
6.   வீட்டு வேலைகளிலிருந்து அறவே விடுதலை கொடுக்காமல் நேரம் கிடைக்கும் போது சிறிய சிறிய வேலைகளுக்கும் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை.
7.   மாணவர்கள் ஈடுபாட்டுடன்தான் படிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
8.   பெற்றோர்களில் இருவரில் ஒருவரோ மாணவர்களுடன் உட்கார்ந்து அவர்கள் படிப்பதற்கு உதவி புரிந்தால் அதுவும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.
9.   குழந்தைகள் என்னென்ன பாடங்கள் படித்தார்கள் என்று தெரிந்துக்கொள்வது நல்லது.       
10.   என்னென்ன வீட்டுபாடம் கொடுத்திருக்கிறார்கள் என்று தினமும்     தவறாமல் அறிந்துக் கொண்டு அவற்றை குழந்தைகள் சரிவர முடித்துவிட்டார்களா என்றும் மறவாமல் கண்காணிக்க வேண்டும்.
11. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை குழந்தைகளிடம் பெரிதாக காட்டிகொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
12. உறவினர் திருமணத்திற்கு செல்கிறோம், விருந்திற்கு செல்கிறோம் என்று தேர்வு நேரங்களில் குழந்தைகளை அலைகழிக்காமல் இருப்பதும் அவசியம்.
13. தேர்வுக்கு படிக்க வேண்டும் என்று காரணம் கூறி தொழுகைக்கு கூட அனுப்பாமல் இருப்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
14. குழந்தைகள் படிப்பதற்கு அமைதியான சூழ்நிலை மிகவும் அவசியம். அதை ஏற்படுத்திக்கொடுப்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகம்.
15. குழந்தைகளை "படி படி" என்று சொல்லிக்கொண்டு பொறுப்பில்லாமல் வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளுக்கு இடையூறு தறும்வகையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
16. குழந்தைகளை 'படிஎன்று சொல்லிவிட்டு அவர்களுக்கு அருகில் இல்லாமல் உற்றார் உறவினர்களுடன் தொலைபேசியில் தேவையில்லாத நீண்ட பேச்சுகளையும் தவிர்க்க வேண்டும்.
17.  சரியான நேரத்தில் உணவு ஏற்பாடு செய்து தருவதை மறந்துவிடவும் கூடாது. மறுத்துவிடவும் கூடாது.
18. பெற்றோர்களுக்கிடையில் பிரச்சனை இருக்குமேயானால் தயவு செய்து அதனை தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளுக்கு முன்பு காண்பிக்க வேண்டாம்.
19. தொலைக்காட்சிகள், மொபைல் போன் விளையாட்டுகள், கம்பியூட்டர் விளையாட்டுகளை முழுவதும் குழந்தைகளிடமிருந்து அப்புறப்படுத்தி வைப்பது சிறந்தது.
20. குழந்தைகள் மனநிலையை நன்கு ஆராய்ந்து அதன்படி செயல்பட முயற்சிக்க வேண்டும்.
21. குழந்தைகள் எந்தெந்த பாடங்களில் பலகீனமாக இருக்கிறார்களோ அவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்க வேண்டும்.
மேற்கூரிய ஆலோசனைகள் மட்டுமின்றி பெற்றோர்கள் தமக்கிருக்கும் பொறுப்புகளை நன்கு உணர்ந்து தமது குழந்தைச்செல்வங்கள் வரவிருக்கும் ஆண்டு இறுதித்தேர்வில் சிறப்பான முறையில் வெற்றிபெற உறுதுணையாக இருப்பதற்கு முயலவேன்டும்.
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...