ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.
1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் ஏழு பேர்:
1. அபஹூரைரா (ரலி) - 5374 ஹதீஸ்கள்
2. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) - 2630 ஹதீஸ்கள்
3. அனஸ் இப்னு மாலிக் (ரலி) - 2286 ஹதீஸ்கள்
4. ஆயி்ஷா ஸித்தீக்கா(ரலி) - 2210 ஹதீஸ்கள்
5. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) - 1660 ஹதீஸ்கள்
6. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) - 1540 ஹதீஸ்கள்
7.அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) - 1170 ஹதீஸ்கள்
1000 ஹதீஸ்களுக்கும் குறைவாக அறிவித்தவர்கள்:
8. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) - 848 ஹதீஸ்கள்
9. அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ்(ரலி) - 700 ஹதீஸ்கள்
10. உமர் இப்னுல் கத்தாப்(ரலி) - 537 ஹதீஸ்கள்
11. அலீ இப்னு அபீதாலிப் (ரலி) - 536 ஹதீஸ்கள்
12. அபூதர்ருல் கிஃபாரி(ரலி) - 281 ஹதீஸ்கள்
13. இப்னு அபீ வக்காஸ்(ரலி) - 270 ஹதீஸ்கள்
14. முஆது இப்னு ஜபல்(ரலி) - 200 ஹதீஸ்கள்
15. அபூதர்தாஃ(ரலி) -179 ஹதீஸ்கள்
16. உத்மான் இப்னு அஃப்ஃபான்(ரலி) - 147 ஹதீஸ்கள்
17. அபூபக்கர்(ரலி) - 142 ஹதீஸ்கள்
பெருமானார் (ஸல்)அவர்களின் மனைவியரில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்:
18. அன்னை ஆயிஷா(ரலி) - 2210 ஹதீஸ்கள்
19. அன்னை உம்மு ஸலமா(ரலி) - 387 ஹதீஸ்கள்
20. அன்னை உம்மு ஹபீபா(ரலி) - 65 ஹதீஸ்கள்
21. அன்னை ஹஃப்ஸா(ரலி) - 60 ஹதீஸ்கள்
22. அன்னை மைமூனா(ரலி) - 46 ஹதீஸ்கள்
23. அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) - 11 ஹதீஸ்கள்
24. அன்னை ஸஃபிய்யா(ரலி) - 10 ஹதீஸ்கள்
25. அன்னை ஸவ்தா(ரலி) - 5 ஹதீஸ்கள்
ஏனையத் தோழியர்:
26. அஸ்மா பின்த் யஸீத்(ரலி) - 81 ஹதீஸ்கள்
27. அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) - 58 ஹதீஸ்கள்
28. பாத்திமா பின்த் அஸத்(ரலி) - 46 ஹதீஸ்கள்
29. உம்மு ஹானி(ரலி) - 46 ஹதீஸ்கள்
30. உம்மு ஃபள்லு(ரலி) - 30 ஹதீஸ்கள்
31. அர்ருபை பின்த் முஅவ்வத்(ரலி) - 21 ஹதீஸ்கள்
32. கவ்லா பின்த் ஹகீம்(ரலி) - 15 ஹதீஸ்கள்
33. உம்மு சலைம்(ரலி) - 14 ஹதீஸ்கள்
34. புஸ்ரா பின்த் ஸஃப்வான்(ரலி) - 11 ஹதீஸ்கள்
35. ஸைனப் பின்த் அபீஸலமா(ரலி) - 7 ஹதீஸ்கள்
36. உம்முல்அஃலா அல்-அன்சாரிய்யா(ரலி) - 6 ஹதீஸ்கள்
இன்னும் ஏராளமானோர் நபிமொழிகளை அறிவித்துள்ளனர். பின் வரும் நபிமணியின் எச்சரிக்கையின் விளைவால் எழுந்த அச்சத்தினால் பலர் ஹதீஸ்களை தொகுப்பதையும் அறிவிப்பதையும் தவிர்த்தனர்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என்னைபற்றி நான் கூறியதாக யார் பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.(அவன் போய் சேரும் இடம் நரகமாகும்.
இமாம்கள் - ஹதீஸ்கள் நூல்கள்:
- இமாம் முஹம்மது இஸ்மாயீல் புஹாரி(ரஹ்) - ஸஹீஹூல் புஹாரி
- இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) - ஸஹீஹ் முஸ்லிம்
- இமாம் அபூதாவூது சுலைமான் அஸ்ஸஜஸ்தானீ - ஸூனனு அபீதாவூது
- இமாம் அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ(ரஹ்) - ஜாமிவுத் திர்மிதீ
- இமாம் அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ - ஸூனனுந் நஸாயீ
- இமாம் அபூஅப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசி இப்னுமாஜா – இப்னுமாஜா
- இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) - முஸ்னது அஹ்மது
அதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறுவது முஸ்னது அஹ்மது என்ற நூல் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக