இது குழந்தைகளுக்கு..........
- நாளைக்கு நாளைக்குன்னு பாடங்களைச் சேர்த்து வைக்காதீங்க.
- அன்றைக்குரிய பாடங்களை முழுமையாகப் படிக்காவிட்டாலும் திருப்பி ஒருதடவை வாசித்துவிடுங்கள்
- பரீட்சை வரப் போகிறதேன்னு பயப்படாமல் பயம் எதனால்
வருகிறது.....படிக்காததினால்தான் என்பதைப் புரிந்து கொண்டு படிக்க
ஆரம்பிக்கலாம்.. - எளிதான பாடங்களை சீக்கிரம் முடித்து விட்டுக் கடினமானவற்றை
ஆரம்பியுங்கள்....முதலிலேயே கடினமானவற்றை ஆரம்பித்தால் ஐய்யோ இது தெரிலியே அது தெரிலியேன்னு பதட்டம் வரும். - படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.முந்தைய தடவை 60 வாங்கியிருந்தால் இந்த தடவை 70 வாங்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்.போன தடவை ஃபெயிலாகியிருந்தால் இந்த முறை பாஸாக வேண்டும் என்று ஒரு
குறைந்த பட்ச இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம். - பரீட்சை நாட்களில் விளையாட்டு ,பாட்டு இப்படிப் பொழுது போக்கும் விஷயங்களை அறவே தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.இடையிடையே கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் செய்து
கொள்ளலாம் - பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் கண் விழித்துப் படித்துத்
தூங்காமலிருப்பது கண்டிப்பாக கூடாது. - பரீட்சைக்குக் கிளம்புவதற்கு முன் தினமே தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டால் காலை நேர ஆர்ப்பாட்டத்தைத் தவிர்க்கலாம்.
- பரீட்சைக்குச் செல்லும் முன் அது படிச்சாச்சா...இது படிச்சாச்சா...அப்படீன்னு கேட்பவர்கள் இருக்குமிடத்திலிருந்து விலகி நிற்கவும்.அது தன்னம்பிக்கையை அசைத்து விடும்.
- பரீட்சை எழுதி வந்தவுடன் "அதுக்கு விடையென்ன...இதெப்படி எழுதணும்னு.... கேட்டுத் தவறாக எழுதிய கேள்விகளுக்காக வருந்த வேண்டாம்.இது அடுத்த பரீட்சைக்குப் படிக்கும் உற்சாகத்தைக் கெடுத்து விடும்.
இது பெற்றோர்களுக்கு...........
- சும்மா சும்மா படி...படின்னு சொல்லாதீங்க.
- பரீட்சை என்பது ஒரு பயப்படும் விஷயம் என மனதில் பதிய வைக்காதீர்கள்.
- பரீட்சைக்காக படிப்பது என்றில்லாமல்.....விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புரிந்து கொள்வதற்காகப் படிக்கத் தூண்டுங்கள்
- அவனை மாதிரி படி...இவளைப் போல் படி என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.முதல் ராங்கை விட்டுடாதே என்று பயமுறுத்தாதீர்கள்.
- 10 நாளில் பரீட்சை வருது .....நீ இப்படி விளையாடறேன்னு பரீட்சை பற்றி அச்சம் உண்டாக்காதீர்கள்.
- பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் கண் விழித்துப் படிக்க வைப்பது கண்டிப்பாக கூடாது.
- பரீட்சைக்குக் கிளம்பும் போது போருக்குக் கிளம்புவது போல ஆர்ப்பாட்டம்
பண்ணாதீர்கள். - பரீட்சை எழுதி வந்தவுடன் "அதெப்படி எழுதினே...இதெப்படி எழுதினே....இதை ஏன் விட்டே"அப்படீன்னு கேட்டுக் கஷ்டப் படுத்த வேண்டாம்.
- இவ்வளவு நாள் படித்தது நினைவிலிருக்கிறதா..என்று அறிவதற்கு அல்ல பரீட்சை, படித்தது புரிந்திருக்கிறதா என அறிந்து கொள்ளத்தான் என்பதை உணர்த்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக