சனி, 5 மார்ச், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (13 லிருந்து 15 வரை):

41.எந்த இரு கிழமைகளில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)திங்கட்கிழமை. (2) வியாழக்கிழமை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
42.உயிர்த் தியாகிகள் ஐந்து பேர் ஆவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த ஐவர் யார், யார்? (1) பிளேக் (கொள்ளை) நோயால் இறந்தவர். (2) வயிற்று(ப்போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர். (3) தண்ணீரின் மூழ்கி இறந்தவர். (4) (வீடு, கட்டடம் ஆகியவை இடிந்து விழும்போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர். (5) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
43.அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று விஷயங்களை விரும்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன? (1) அவனுக்கு இணைகற்பிக்காமல் வணங்குவது. (2) உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொறுப்பாளராக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவது. (3) பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பது. (அபூஹுரைரா (ரலி) - நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்).
44.அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று விஷயங்களை வெறுக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன? (1) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று (ஆதாரமில்லாமல்) கூறுவது. (2) அதிகமாக கேள்வி கேட்பது. (3) பொருளை விரையமாக்குவது (அபூஹுரைரா (ரலி) - நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்).
45.மறுமை நாளில் பார்க்கும் கண்களும், கேட்கும் செவியும், பேசும் நாவும் கொண்ட நரகத்தின் ஒரு பகுதி கிளம்பி, எந்த மூன்று பேரின் மீது நான் சாட்டப்பட்டுள்ளேன் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1) வரம்பு மீறி முரண்டு பிடித்தவன். (2) அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளிடம் பிரார்த்தித்தவன். (3) உருவங்களை வரைந்தவன். (அபூஹுரைரா (ரலி) - நூல்: திர்மிதீ).
46.எந்த மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெங்கும் (புனிதம் கருதி) பயணம் மேற்கொள்ளக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1) மஸ்ஜிதுல் ஹராம். (2) மஸ்ஜிதுல் நபவி. (3) மஸ்ஜிதுல் அக்ஸா. (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) - நூல்: புகாரி).
47.மூன்று தன்மைகள் அமையப்பெறாத எவரும் ஈமானின் சுவையை உணரமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று தன்மைகள் என்னென்ன? (1) ஒருவரை நேசித்தால், அல்லாஹ்வுக்காக நேசிப்பது. (2) இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியப் பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது. (3) அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராவது. (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்: புகாரி).
48.ஆதமின் மகன் இறந்தவுடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று காரியங்கள் என்னென்ன? (1) நிரந்தர தர்மம். (2) பயந்தரும் கல்வி. (3) பெற்றோருக்காக பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
49.இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று பொருட்கள் என்னென்ன? (1) அவரது குடும்பம். (2) அவரது செல்வம். (3) அவரது செயல்கள். அவரது குடும்பமும், செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரது செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன. (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்: புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...