திங்கள், 14 மார்ச், 2011

தும்மல் - அல்ஹம்துலில்லாஹ்!

தும்மல் என்பது உடல் கிருமிகளிடமிருந்து தப்பிக்க செய்யும் தன்னிச்சையான செயல். இதனால் பல்வேறு கிருமிகளிடமிருந்து நமது உடல் பாதுகாக்கப்படுகிறது.
சுற்றுச் சூழலில் இருக்கும் கிருமி ஒன்று நமது உடலுக்குள் நுழைய முற்படும் போது, அதனை உடலுக்கு எச்சரிக்கும் ஒரு கருவியாகவும் நாம் தும்மலைக் கருதலாம்.
பலருக்கும் பலவிதங்களில் இந்த தும்மல் வெளிப்படலாம். தொடர் தும்மல், கண்களில் நீர் வடிதல், காய்ச்சல், சருமத்தில் பாதிப்பு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஏற்படும்.
மூக்கு வழியாக ஏதேனும் கிருமிகள் உள்ளே நுழைய முற்படும் போது, அங்கிருக்கும் நரம்புகள் மூளையின் தகவலைப் பெறாமலேயே தன்னிச்சையாக ஒரு செயலைச் செய்கிறது. அதுவே தும்மல்.  இறைவனால் உருவாக்கப்பட்ட இந்த நரம்புகள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு நமது உடலுக்குள் அந்நியப் பொருட்கள் செல்லவிடாமல் தடுக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!  (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!).
நன்றி :தமிழ் வெப்துனியா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...