புதன், 16 மார்ச், 2011

இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன!!!

(கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டிக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள்.  அவர் எதிரிகளுக்கு பதிலடிக் கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பணியாற்றுப)வராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர்கள் இவரைப்  பார்த்துக்கொள்ளலாம்" என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அப்படி கூறினார்கள் என அறிந்து கொள்வதற்காக) இன்னொரு மனிதர் அவரைப் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக்கொண்டிருந்தார்.  இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார்.  அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்பகுதியை பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியை தன் மார்புக்கிடையே வைத்து, அந்த வாளின் உடலை அழுத்திக்கொண்டு  தற்கொலைச் செய்து) கொண்டார்.  வாள் அவரின் இரு தோள்களுக்கிடையே இருந்து  வெளியேறியது.  அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் செயல்களைச் செய்து வருவார்.  ஆனால் (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதேப் போன்றே), ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.  இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் என்றார்கள்.  (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸாத் (ரலி) - நூல்: புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...