திங்கள், 7 மார்ச், 2011

அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) அலறியடித்து ஓடிவிடும்!!!

அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால் அவதிபடுவோர் ஏராளம்.  குறிப்பாக மசாலா உணவுப் பொருட்களை உண்டவுடன் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும்.  இவற்றைத் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் பல எளிய வழிகள் உண்டு:
பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக தினமும் வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.  தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கட்டாயம் உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.   இளநீர் அருந்தினால் மிகவும் நல்லது. இது அமிலப் பிரச்சனையைத் தீர்க்கும்.  தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவது நல்லது.  இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் முடித்துவிடுங்கள்.  ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவது அமில பிரச்னைக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.  கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.  ஊறுகாய், கார சட்னி,  வினிகர் ஆகியவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே நல்லது.   புதினா இலையை கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீரை உணவுக்குப் பின்னால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.  கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு சப்பினால் நல்ல பலன் கிடைக்கும்.  வெள்ளம், எலுமிச்சை, வாழைப்பழம், பாதாம் பருப்பு, தயிர் ஆகியன உடனடியாக பலன் தரக்கூடியதே.  அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் அசிடிட்டி ஏற்படுவதை அதிகமாக்கிவிடும்.  சுவிங்கம் மெல்லுவது நல்லது. அதனால் சுரக்கும் அதிகப்படியான உமிழ் நீர் உணவுக் குழாயில் உள்ள உணவை நகர்த்திச் சென்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தவிக்கும்.  இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும் என்பதால், அதனை சாராகவோ, பவுடராகவோ பயன்படுத்தலாம்.  மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை நீரில் சர்க்கரை கலந்து பருகினால் நல்லது. 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக முருங்கைக்காய், பீன்ஸ், பூசணி, முட்டைகோஸ், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் அதிக அளவு எடுத்துக் கொள்வதும், அசிடிடியை எட்டிபார்க்காமல் செய்துவிடும்.
மேலே குறிப்பிட்டவற்றில் பின்பற்றுவதில் எது எளிமையோ அதைப் பின்பற்றினால் அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) அலறியடித்து ஓடிவிடும்.
நன்றி: தமிழ் வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...