சனி, 5 மார்ச், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (16 லிருந்து 18 வரை):

50. அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்கள் எவைகள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?        (1) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது. (2) சூனியம் செய்வது. (3) நியாயமின்றி கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரை கொல்வது. (4) வட்டியை உண்பது. (5 ) அனாதைகளின் சொத்தை உண்பது.  (6 ) போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது.  (7 ) அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவது.   (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
 
51. தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலைத்  தருவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த ஏழு கூட்டத்தினர் யார்? யார்?  (1)  நீதியான தலைவன்.  (2) இறை வணக்கத்தில் வளர்ந்த வாலிபர்.  (3)  பள்ளியுடன் தொடர்பு கொண்ட மனிதன்.  (4)  அல்லாஹ்வுக்காக நட்பு பாராட்டி ஒன்று சேர்ந்து, அவனுக்காகவே பிரிகின்ற  இரு மனிதர்கள்.  (5)  அழகும் , அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (விபச்சாரத்திற்கு)  அழைக்கும் போது, 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' என கூறும் (கற்புள்ள) ஒரு மனிதர்.  (6)  தன் வலக்கரம் தர்மம் செய்வதை இடக்கரம் அறியாவண்ணம் (இரகசியமாக) தர்மம் செய்பவர்.   (7)  தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்வதினால் கண்ணீர் வடிக்கும் மனிதர்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம்).
 
52. நயவஞ்சகனின் குணங்கள் நான்கு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நான்கு குணங்கள் எவை?  (1)  பேசினால் பொய் பேசுவான். (2) வாக்களித்தால் மாறு செய்வான்.  (3)  நம்பினால் மோசடி செய்வான்.  (4) வழக்காடினால் அவமதிப்பான்.  (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) - நூல்: புகாரி).
 
53. இஸ்லாத்தில் சிறந்த செயல் எது என ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு என்ன கூறினார்கள்?  (1)  (பசித்தவருக்கு) நீ உணவளிப்பது.  (2)  உனக்கு தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் சலாம் சொல்வது.  (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்). 
 
54. கணவன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமைகள் எவை என நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்?  (1)  நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிக்க வேண்டும்.  (2)  நீ அணியும் போது அவளையும் அணியச் செய்யவேண்டும்.  (3)  முகத்தில் அடிக்கக் கூடாது.  (4)  வீட்டில் தவிர (வெளியிடங்களில்) அவளை கண்டிக்கக் கூடாது.   (5)  இழிவான வார்த்தைகளால் அவளைத் திட்டக் கூடாது.   (அறிவிப்பவர்: முஆவியா (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம்).
 
55. எந்த மூவருடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?  (1) தந்தை  (2) பயணி  (3) அநீதி இழைக்கப்பட்டவன்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: திர்மிதீ) (அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி) - நூல்: அஹ்மத்).
 
56. 'மறுமை நாளில் மூவருக்கு எதிராக  நான் வழக்காடுவேன்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அல்லாஹ் கூறும் அந்த மூவர் யார்?  (1)  ஒருவன், என் (அல்லாஹ்வின்) பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன்.  (2)  இன்னொருவன், சுதந்திரமான ஒருவனை விற்று, அதன் பணத்தைச் சாப்பிட்டவன்.  (3) மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் வேலை வாங்கி கொண்டு, கூலி கொடுக்காதவன்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
 
57. மூவரின் தொழுகை அவர்களின் தலைக்கு மேல் ஒரு சாண் அளவுக்குக் கூட மேலே செல்வதில்லை. (அதாவது இறைவன் அவர்களின் தொழுகையை ஏற்றுக்கொள்வதில்லை) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த மூவர் யார்?  (1)  மக்கள் ஒருவரை விரும்பாதிருக்கும் நிலையில், அந்த மக்களுக்கு இமாமாக நின்று தொழவைப்பது.  (2)  தனது கணவனின் வெறுப்புக்கு ஆளான பெண்.  (3)  பரஸ்பர உறவைத் துண்டித்து வாழும் இரு முஸ்லிம் சகோதரர்கள்.  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல் : இப்னுமாஜா.
 
58. எந்த மூன்றை வெளிப்பகட்டுக்காகச் செய்தவன் இணை வைத்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)வெளிப்பகட்டுக்காக தொழுதவன் இணை வைத்தவனாவான்.   (2) வெளிப்பகட்டுக்காக  நோன்பு  வைத்தவன்  இணை வைத்தவனாவான்.  (3) வெளிப்பகட்டுக்காக  கொடை அளித்தவன்  இணை வைத்தவனாவான்.  (அறிவிப்பவர்: ஷத்தாத்  இப்னு அவ்ஸ் (ரலி) - நூல்: அஹ்மத்).
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...