சனி, 5 மார்ச், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (11 லிருந்து 12 வரை):

31.சாபம் ஏற்படக்கூடிய இரண்டு விஷயங்களை அஞ்சிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த இரண்டு விஷயங்கள் என்னென்ன? (1) மக்கள் நடமாடும் பாதைகளில் மலம், ஜலம் கழிப்பது. (2) மக்கள் நிழலுக்காக ஒதுங்கும் இடங்களில் மலம், ஜலம் கழிப்பது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
 
32.நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நான்கு நோக்கங்கள் என்னென்ன? (1)அவளது செல்வத்திற்காக. (2)அவளது குடும்ப பாரம்பரியத்திற்காக.(3)அவளது அழகிற்காக. (4)அவளது மார்க்க நல்லொழுக்கத்திற்காக. ஆகவே மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்துகொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி). அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸாயீ, அஹ்மத், தாரமீ).
                                             
33.எந்த இரண்டு விஷயங்களைக் குறித்து பயந்துகொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)இவ்வுலகம் (2)பெண்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) - நூல்: முஸ்லிம்).
34.எந்த இரண்டு நன்மைகளை மக்கள் அறிவார்களானால், அதற்காக போட்டிப் போட்டுக்கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகிவிடுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)பாங்கு சொல்வதற்குரிய நன்மை. (2) (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம்).
 
35.அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரிய பாவங்கள் எவை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)அல்லாஹ் உன்னை படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது. (2)உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவை பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது. (3) உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) - நூல்: புகாரி).
36.மூன்று பேரைவிட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று பேர் யார்? (1)தூங்குபவர் விழிக்கும் வரை. (2) சிறுவன் பெரியவராகும் (பருவ வயதை அடையும் வரை. (3) பைத்தியக்காரன் பைத்தியத்திலிருந்து தெளிவாகும் வரை. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்கள்: நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா).
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...