சனி, 5 மார்ச், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (8 லிருந்து 10 வரை):

22.எந்த நான்கு செயல்கள் ஒரு மனிதரிடம் ஒரே நாளில் ஒரு சேர நடந்துவிட்டால், அவர் சொர்க்கத்திற்குப் போவது உறுதியாகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)நோன்பு நோற்றல் (2)ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல் (3)ஏழைக்கு உணவளித்தல்(4)நோயாளியை உடல் நலம் விசாரித்தல். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
 
23.நபி (ஸல்) அவர்கள் எந்த மூன்று விஷயங்கள் குறித்து அபூஹூரைரா (ரலி) அவர்களிடம் வலியுறித்தினார்கள். அவற்றை தாம்மரணிக்கும் வரை விடவேமாட்டேன் என அபூஹூரைரா (ரலி) கூறினார்கள்? (1)ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்றல் (2)ளுஹா தொழுகை தொழுதல் (3) வித்ரு தொழுதுவிட்டு உறங்குதல். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: புகாரி).
 
24.ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய ஐந்து கடமைகள் என்னென்ன? (1)ஸலாமுக்கு பதிலுரைத்தல் (2)நோயாளியை உடல் நலம் விசாரித்தல் (3)ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல் (4)விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ளல் (5)தும்மியவருக்கு மறுமொழி கூறுதல். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: புகாரி).
 
25.முன்பு எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்பட்டிராத இரு ஒளிச்சுடர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன? (1)அல் பாத்திஹா அத்தியாயம் (2)அல் பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்கள்: முஸ்லிம், நஸயீ).
 
26.மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக, அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை என்னென்ன? (1)பொருளாசை (2)நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல்: புகாரி).
 
27.மனிதர்களில் அதிகமானோர் எந்த இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)ஆரோக்கியம் (2)ஓய்வு (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்கள்: புகாரி, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்).
 
28.மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அந்த ஐந்து என்னென்ன? (1)நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். (2)பெண்களின் கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.(3)மழை எப்போது வரும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். (4)எந்த உயிர் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். (5)மறுமை நாள் எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல்: புகாரி).
 
29.பாதைகளின் உரிமைகள் ஐந்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த ஐந்து என்னென்ன? (1) (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையை தாழ்த்திக் கொள்வது. (2) (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பது. (3) ஸலாமுக்கு பதிலுரைப்பது. (4) நன்மை புரியும்படி கட்டளையிடுவது. (5) தீமையைத் தடுப்பது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) - நூல்: புகாரி).
 
30.இயற்கை மரபுகள் ஐந்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த ஐந்து என்னென்ன? (1) விருத்தசேதனம் (கத்னா) செய்வது. (2) மர்ம உறுப்பின் முடிகளை களைவதற்காக சவரக் கத்தி உபயோகிப்பது. (3) மீசையை கத்தரிப்பது. (4) நகங்களை வெட்டுவது. (5) அக்குள் முடிகளை அகற்றுவது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...