ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடி பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும் (இதன் வழியாக பிரவேசியுங்கள்!) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளியாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாக இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்" என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும், தாயும் தங்களுக்கு அற்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்த துயரமும் இல்லையே! எனவே எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாக அழைக்கப்படுவாரா?" எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்!" " நீரும் அவர்களில் ஒருவராவீர் என நான் நம்புகிறேன்" என கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வெள்ளி, 11 மார்ச், 2011
அவருக்கு எந்த துயரமும் இல்லை!!!
லேபிள்கள்:
ஹதீஸ் - சம்பவங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக