ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்குக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்து சென்றது. மற்றோர் இறைத்தூதருடன் சில பேர் கடந்து சென்றனர். மற்றோர் இறைத்தூதருடன் பத்து பேரும், இன்னொரு இறைத்தூதருடன் பத்து பேரும், இன்னொரு இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்து சென்றனர். பிறிதோர் இறைத்தூதர் தனியாகச் சென்றார். அப்போது ஒரு மிகப் பெரியக்கூட்டத்தைக் கண்டேன். நான், "(வானவர்) ஜிப்ரீலே! இவர்கள் என் சமுதாயத்தினாரா?" என்று கேட்டேன். ஜிப்ரீல், "இல்லை. மாறாக அடிவானத்தைப் பாருங்கள்!" என்றார். நான் உடனே பார்த்தேன். அங்கே மிகப்பெரிய மக்கள் திரள் இருக்கக் கண்டேன். ஜிப்ரீல், "இவர்கள் தாம் உங்கள் சமுதாயத்தார். இவர்களின் முன்னிலையில் இருக்கும் இந்த எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை! வேதனையுமில்லை!" என்று கூறினார். நான் "ஏன்" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், "இவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பாக்காதவர்களாகவும், பறவை சகுணம் பார்க்காதவர்களாகவும், தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல் : புகாரி).
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வெள்ளி, 25 மார்ச், 2011
எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை! வேதனையுமில்லை!
லேபிள்கள்:
ஹதீஸ் - சம்பவங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக