ஞாயிறு, 13 மார்ச், 2011

தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (2):

சுறா மீன்:
சுறா என்றழைக்கப்படும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன்  வகைகளில் ஒன்றாகும்.

சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. பத்து இலட்சம் துளிகளில் ஒரு துளி  இரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும். சுறாக்களின் கேள்திறனும் அதிகம். நுண்ஒலிகளைக் கேட்கும் திறன் பெற்றவை.
சுறாக்களுக்குக் குறைஞ்சது நாலு வரிசைப்பற்கள் இருக்கும். இரையைக் குத்திக் கிழிக்கிறது எல்லாமே முதல் வரிசைப் பற்கள்தான். இதுல ஒரு பல் உடைஞ்சு விழுந்துட்டா, பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும். இல்லைன்னாக்கூட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுறாக்களுக்குப் புதிய பல் முளைத்துவிடுகிறது.
புலி சுறான்னு ஒரு வகை. இதுக்கு மட்டும் பத்து வருடத்திலே 24,000 பல் முளைக்கிறது. சுறாக்களால் வண்ணங்களைப் பிரித்து அறிய முடியாது. பார்வையும் கூர்மை கிடையாது. மந்தமான வெளிச்சத்தில்தான் இதற்குப் பார்வை தெளிவாகத் தெரியும்.
சுறாக்களில் சுமார் 440 வகை உண்டு. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை. சுறாக்குட்டிகளுக்குப் பிறக்கும்போதே பற்கள் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவை இரண்டு குட்டிகள் போடும். சில வகை சுறாக்கள் நூறு குட்டிகள் கூடப் போடும். குட்டிகளை அம்மா விட்டுவிட்டுப் போய்விடும். இவை தாமே இரை தேடிப் பிழைத்துக் கொள்ளும். பெரிய சுறாக்கள், குட்டிச் சுறாக்களைச் சாப்பிட்டுவிடும். ஆனால், தாய் தன் குட்டிகளைச் சாப்பிடாது. மாதக்கணக்கில் இவை பட்டினி கிடக்கும். உடம்பு இளைக்காது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பும் எண்ணெயும் இவைகளைப் பாதுகாக்கும்.
கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை. எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...